இடுக்கி நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் நேற்று (ஆக.7) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், நேற்று (ஆக., 06) இரவு பெய்த கனமழை காரணமாக அதிகாலை 4: 30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் நேற்று (ஆக.7) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.



latest tamil news



மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், நேற்று (ஆக., 06) இரவு பெய்த கனமழை காரணமாக அதிகாலை 4: 30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 80 பேர் மாயமாகினர். அதில் இருந்து தப்பித்த சிலர், தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக, மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரயவராய் பாலம் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 1 முதல் பருவமழை துவங்கியதை தொடர்ந்து, மழை தொடர்பான சம்பவங்களில், இதுவரை கேரளாவில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.


latest tamil news



இதனிடையே வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதையடுத்து கேரளாவில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202006:12:04 IST Report Abuse
Mani . V ஊழல் அரசுகள் காடுகளை, மலைகளை தனியாருக்கு தாரை வார்த்தத்தின் பலன் தான் இந்த அழிவுகள். வரும் காலங்களில் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X