அமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 8 வயதான இரண்டு சிறுமிகள் மற்றும் 10 வயதான சிறுவன் என 3 பேரையும் காப்பாற்றச் சென்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.



latest tamil news



29 வயதான மன்ஜீத் சிங் தனது மைத்துனர் மற்றும் பிற நண்பர்களுடன் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது 3 சிறுவ,சிறுமியர் ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டதை கண்ட அவர், தனது தலைப்பாகையை அகற்றி, ஒரு கயிறாக பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற முயன்றபோது எதிர்பாரதவிதமாக ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டார். 40 நிமிடங்களுக்கு பின்னர் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


latest tamil news



இந்த சம்பவம் குறித்து ரீட்லி போலீஸ் கமாண்டர் மார்க் எடிகர் கூறுகையில், ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டு 15 நிமிடம் போராடிய 3 சிறுவ சிறுமியர்களில் இருவர் மீட்கப்பட்டனர். ஒரு சிறுமி மட்டும் மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மன்ஜீத்சிங் இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் கலிபோர்னியா மகாணத்திற்கு வந்ததாகவும் அங்க டிரக்கிங் தொழிலை தொடங்க திட்டமிட்டிருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
09-ஆக-202011:06:25 IST Report Abuse
பெரிய ராசு நண்பா நீவீர் மனிதருள் மாணிக்கம் போய்வா ..ஆத்ம சாந்தி அடையட்டும்
Rate this:
Cancel
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
09-ஆக-202008:37:15 IST Report Abuse
Vasudevan Jayaraman ரியல் டைம் ஹீரோ .
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
09-ஆக-202005:54:14 IST Report Abuse
 Muruga Vel படத்தில் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ கோல்டன் கேட் பாலம் உலக பிரசித்தி பெற்றது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X