அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ்டாலின்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (111)
Share
Advertisement
புதிய கல்வி கொள்கை,மறுவடிவமைப்பு செய்க : ஸ்டாலின் கடிதம்

சென்னை,:'தேசிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க, ஒரு தலைப்பட்சமாக முடிவெடுக்கப்பட்டு இருப்பது, நம் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டின் மதிப்பை குறைப்பதாக உள்ளது.தமிழ் கற்பதை கட்டாயமாக கொண்ட இரு மொழிக்கொள்கை, தமிழகத்தில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அது நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது.கல்லுாரி நுழைவு தேர்வுகள், மாணவர்களுக்கு பாகுபாட்டை காட்டும். தேசிய கல்வி கொள்கையில், தொழிற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாக உள்ளது.

எனவே, நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள, குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்; விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.அதற்கு, மாநிலங்கள் மற்றும் மத்தியில் தொடர்புள்ள அனைத்து தரப்பினரும் பங்கேற்பதற்கான, ஓர் ஆலோசனையை செயல்முறையை மீண்டும் நிறுவ வேண்டும். தேசிய கல்வி கொள்கை - 2020 ஐ மறுவடிவமைக்க வேண்டும்.நம் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள, உரிய செயல்முறைகளை பின்பற்றுவதற்கு, உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை, தேசியக்கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தும் முடிவை, நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
10-ஆக-202019:17:54 IST Report Abuse
dina மிஸ்டர் சுடலை அவர்களே கல்வி மருவடிவமைப்பு என்றால் எப்படி ?கொள்ளை அடடிக்கக்கூடிய வகையிலா ?யில்லை மக்களுக்கு பயன் படும் வகையிலா?ஜனநாயக்கு கோட்பாடு எங்கே குறைந்துவிடத்து?யிந்த கல்வி திட்டத்தில்?இரு மொழி கொள்கை நல்லமுறையில் நடைபெறுகின்றது என்று மக்கள் சொல்ல வேண்டும் . திராவிடம்திராவிடம் என்று கத்திக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் அல்ல .......
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
09-ஆக-202023:28:02 IST Report Abuse
s t rajan திமுக காரங்க நடத்துற பள்ளியில் மும்மொழி இருக்கலாம். தி(ரு)முக குடும்பத்தில் அனைவரும் இந்தி கற்பர். ஆனா அரசு பள்ளியில் கூடாது. வி.பி சிங் சென்னையில் ஹிந்தியில் பேசியதாவது மொழி பெயர்த்தவர் கனிமொழி அதுவும் கருணா முன்னிலையில். நடிகர்களூம் சளைத்தவர்கள் அல்ல. ஹந்தி மொழிப்படஙகளில் நடித்து கோடிகளில் புரழுவர். ஹிந்தி பெண்ணை மணம் முடிப்பர். தனியார்/உலகத்தை பள்ளிகளில் 5 மொழி கற்பர். தமிழன் ஆளப்போகிறான் என்று பாடிவிட்டு மகனை கனடாவில் படிக்க வைப்பர். இவர்களைப் போன்ற சுயநலமிகளை இன்னமும் நம்பி ஏமாற நாங்கள் தயாரக இல்லை. மக்கள் என்ன படிக்கணும் என்ன பேசணும் என்பதை இந்த சில சுயநல ஆரசியல் வ்யாதிகளோ, அவர்களுக்கு கூஜா தூக்கும் கூத்தாடிகளோ என்ன தீர்மானம் செய்வது ? எந்த மொழிகளைப் படிக்க வேண்டும் என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுங்கள். சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் வாழ்வோர் குறைந்த பட்சம் மூன்று மொழிகள் படிக்கும் போது தமிழகத்தில் உள்ளவர்கள் ஏன் பின்தங்கி யிருக்க வேண்டும். அது மட்டுமின்றி சில அரசுப்பள்ளிகளில், தமிழ் உருது ஆங்கிலம் சொல்லித்தரும் போது இந்தி கற்றால் என்ன ? ஸ்டாலின் வாழ்ந்து முடித்தவர். (60ஐ கடந்தும் பரந்த நோக்கு வராதவர்.) வாழவேண்டியவர்கள் எதிர்காலத்தை இந்த உதிர் காலம் என்ன தீர்மானிப்பது. ?
Rate this:
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
09-ஆக-202020:28:26 IST Report Abuse
Venramani Iyer தலைவா உங்களுக்கு என்ன பண்ணனும்னு தெளிவா சொல்லுங்க. நீங்க துண்டு சீட்டையே ஒழுங்கா படிக்க மாட்டீங்க வரைவு கல்வி கொள்கையை ஒழுங்கா படிச்சீங்களா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X