கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' கொடுக்க லஞ்சம் வாங்கும் நபர்களுக்கு'செம டோஸ்!'

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 08, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
'இ - பாஸ்' கொடுக்க லஞ்சம்:'செம டோஸ்!'

சென்னை :தமிழகத்தில், 'இ - பாஸ்' வழங்க, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு, சென்னைஉயர் நீதிமன்றம் நேற்று, 'செம டோஸ்' விட்டது. 'இதில் கொள்ளையடிக்கும் அதிகாரிகள், ரத்த வேட்கையுடன் அலையும் ஓநாய்கள்' என்று, கடும் காட்டத்துடன் கண்டித்துள்ள நீதிபதிகள், 'இ - பாஸ் ஊழல் பேர்வழிகளை, இரும்புக் கரத்தால் அடக்க வேண்டும்' என்றும்,அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் சிவபாபு என்பவர் தாக்கல் செய்த மனு:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நுாற்பாலைகளில், போதிய தொழிலாளர்கள் இல்லை. திருவண்ணாமலையைச் சேர்ந்த, 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை, சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.குழந்தை தொழிலாளர்கள்கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நுாற்பாலைகளுக்காக, இ - பாஸ் இல்லாமல், 200க்கும் மேற்பட்ட சிறுமியர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனவே, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், சட்டவிரோதமாக வேலையில் அமர்த்தப்பட்டுள்ள சிறுமியரை மீட்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜெ.அசோக் ஆஜரானார்.'அவினாசி அருகேயுள்ள சென்னியப்பா நுாற்பாலையில், 14 - 18 வயது சிறுமியர், 138 பேர் பணிபுரிகின்றனர்; குழந்தை தொழிலாளர்கள் அங்கு இல்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நுாற்பாலையில் பணியாற்றும் சிறுமியரிடம், காணொலி காட்சி வழியாக, நீதிபதிகள் விசாரித்தனர்.அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கோடை விடுமுறையின் போது, தரகர்கள் வழியாக சிறுமியரை அழைத்து வந்து, ஆலைகளில் பணியாற்ற வைக்கின்றனர்; படிக்க வைப்பதாகவும், உத்தவாதம் அளிக்கின்றனர்.கல்வி பயின்று வருவதாக சிறுமியர் கூறினாலும், பணியில் இருந்து கொண்டே, எப்படி படிக்க முடியும் என்பது தெரியவில்லை.சிறுமியருக்கு கல்வி வழங்குவதாக, ஆலை தரப்பில் கூறுவதை நம்ப முடியவில்லை.


ஊழல் அதிகாரிகள்கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், நுாற்பாலையில் பணியாற்றுவதற்காக, இந்த சிறுமியரை அழைத்து வந்திருப்ப தாகவும், முறையாக இ - பாஸ் பெறப்படவில்லை எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.இ - பாஸ் பெறாமல், ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டத்துக்கு, எப்படி இந்த சிறுமியரை அழைத்து வந்தனர் என்பது தெரியவில்லை. பணத்துக்காக வளைந்து கொடுத்து, விதிமுறைகளை மீறி, இ - பாஸ் இன்றி பயணிக்க அனுமதிக்கின்றனர்.எந்த சூழ்நிலையையும், ஆதாயத்துக்காக பயன்படுத்தும் ஊழல் அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதற்கு, இது ஒரு உதாரணம். வைரஸ் பரவலால், உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது.பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, தற்போது மெதுவாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.அவசர காரியங்களுக்கு, பொது மக்கள் பயணிக்க அனுமதிப்பதற்கு, இ - பாஸ் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.

இ - பாஸ் பெற்று தர, தரகர்கள் இருப்பதாகவும், விண்ணப்பித்து கிடைக்காதவர்களிடம், 500 முதல், 2,000 ரூபாய் வரை பெற்று, பாஸ் வாங்கி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.ஆய்வுஇது குறித்து, செய்திகள் வந்துள்ளன.அரசு, இந்தப் பிரச்னையை சீரியசாக கவனிக்க வேண்டும்.சில மாதங்களாக, மக்களால் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு பயணிக்க முடியவில்லை; பணிக்காகவும் செல்ல முடியவில்லை. அவர்கள், துயரப்படுகின்றனர்.இதற்கு, அரசு காரணமில்லை என்றாலும், சில ஊழல் அதிகாரிகள், இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இ - பாஸ் வழங்குவதில் கொள்ளை அடிக்கின்றனர்.இவர்கள், ரத்த வேட்கையில் அலையும் ஓநாய்கள் போன்றவர்கள். இரும்பு கரத்தால், இவர்களை அடக்க வேண்டும். திருவண்ணா மலையில் இருந்து திருப்பூருக்கு, இ - பாஸ் இன்றி, எப்படி சிறுமியரை அழைத்து வர முடிந்தது என்பதற்கு, ஆலை தரப்பில், மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அரசு அளிக்கும் இலவச கல்வி, இலவச உணவு, உதவித் தொகை வசதிகளை பயன்படுத்தி, குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல், பள்ளிக்கு பெற்றோர் அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல் இருக்க, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில், அவ்வப்போது, தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நலக் குழு, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். அதிகாரிகள் விழிப்புணர்வுடன், எச்சரிக்கையாக இல்லை என்றால், இது போன்ற பிரச்னைகளை தடுக்க முடியாது. குழந்தைகள் நலக் குழு வழியாக, பெற்றோரிடம் சிறுமியரை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
09-ஆக-202021:42:13 IST Report Abuse
Ketheesh Waran நேரடியாக ஆ தி மு க அரசு என்று கூறாமல் மீதி எல்லோரையும் கூறியிருக்கிறது நீதிமன்றம். விஷ செடியின் ஆணிவேரை வெட்டாவிடின் எதுவித பிரயோஜனமும் இல்லை
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஆக-202004:13:45 IST Report Abuse
தல புராணம்விஷ செடியின் ஆணிவேரை வெட்டணும்ன்னா டில்லி பாஜக தேர்தல் நிதி கஜானா வரைக்கும் களைக்கொல்லி மருந்து அடிக்கணும்....
Rate this:
Cancel
Ramamoorthy - Erfelden Reidstadt,ஜெர்மனி
09-ஆக-202021:26:29 IST Report Abuse
Ramamoorthy எல்லா துறைகளிலும் அரசியல்வாதிகள் மந்திரிகள் பிஏக்கள் இ ட மாறுதல் போஸ்டிங் எல்லாவற்றுக்கும் ரேட் வைத்து புகுந்து விளையாடுவது ஐம்பது வருட காலமாக நடக்கிறது. டிஎன் பி எஸ் சி தேர்வு முறை ஊழல் பல காலமாக நடந்து வருவது நாறிப்போயிற்று. எல்லா துறைகளிலும் மாதா மாதம் மந்திரிகளுக்கு மாமூல் கொடுக்கவேண்டும் என்கிற நடை முறையும் பேப்பர்களில் வந்தது. போலீஸ் துறையிலும் இது நடைமுறைக்கு வந்ததாக பேப்பரில் படிட்த்தோம்.. ஆக நேர்மையாளர்கள் முற்றிலும் இல்லாதபடி எல்லா துறைகளிலும் செய்துவிட்டார்கள். தாத்தா கொடு தான் போட்டார். அம்மா காலத்தில் பக்கா ரோடாகவே ஊழல் பரிணாமம் எடுத்தாயிற்று. வோட்டுக்கு பணம் கொடுத்து வாங்குவதும் நடை முறைக்கு கொண்டுவந்தாயிற்று. முப்பது சதவீதம் மக்கள் வோட்டு போடுவதில்லை. . எனது அனுபவத்தில் நீதி துறை மற்றும் போலீஸ் துறை மீதும் இருந்த நம்பிக்கை முற்றிலும் பொய் விட்டது.. மோடிஜி அவர்கள் மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பது போல் தமிழ்நாட்டிலும் எதாவது அதிசயம் நடந்தால் தான் உண்டு. ஆனால் வாய்ப்பு மிக மிக குறைவு. ஏன் எனில் இங்கு யாரும் திருந்த வாய்ப்பே இல்லை
Rate this:
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
09-ஆக-202022:02:59 IST Report Abuse
CHINTHATHIRAIநாம் சரியாக இருந்தால் சுற்றமும் நேர்மையுடன் இருக்கும் . நல்ல மனிதர்கள் சிலர் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள் ....
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202020:55:15 IST Report Abuse
babu பத்து பைசா செலவழிக்காம நீதிமன்றத்தில நீதி, நஷ்டஈடு வாங்குன பொதுஜனமெல்லாம் இப்ப எந்த மனநிலையில இருக்காங்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X