எக்ஸ்குளுசிவ் செய்தி

ரஜினி கையில் மூன்று முதல்வர்கள்!

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (76) | |
Advertisement
நடிகர் ரஜினி மனதில் உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் மாதத்தில், ரஜினியின் கட்சி துவக்கப்படுகிறது. 2021 ஜன., மாதம், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைத்து, பிரமாண்டமான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ராமதாஸ் கடிதம்முதல்வர் வேட்பாளராக, தன்னை முன்னிலைப்படுத்த, ரஜினி விரும்பவில்லை. 'நான் கை காட்டுகிறவர் தான்,
ரஜினி கையில் மூன்று முதல்வர்கள்!

நடிகர் ரஜினி மனதில் உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் மாதத்தில், ரஜினியின் கட்சி துவக்கப்படுகிறது. 2021 ஜன., மாதம், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைத்து, பிரமாண்டமான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ராமதாஸ் கடிதம்

முதல்வர் வேட்பாளராக, தன்னை முன்னிலைப்படுத்த, ரஜினி விரும்பவில்லை. 'நான் கை காட்டுகிறவர் தான், முதல்வர் வேட்பாளர்' என ஏற்கனவே, தன் ரசிகர்களிடம், ரஜினி அறிவித்து விட்டார். ஆனால், ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என, அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

'ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், சமீபத்தில், அவரது கட்சி மாநில நிர்வாகி ஒருவர், 'ரஜினி முதல்வர் வேட்பாளராக இருக்க விரும்பவில்லை என்றால், அவரது நண்பரான கமலை அறிவிக்க வேண்டும்' என்றார்.இந்த முடிவை, கமல் சொல்லித்தான், மாநில நிர்வாகி கூறியுள்ளார் என, ரஜினி மக்கள் மன்றத்தினர் கருதுகின்றனர்.

இதையடுத்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அனைத்து ஊடகங்களுக்கும், ஒரு கடிதம் எழுதினார். அதில், தன் மகன் அன்புமணியை, முதல்வர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். 2016 சட்டசபை தேர்தலில், அன்புமணி, முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டதையும், அவரது பெருமைகளையும், அக்கடிதத்தில் ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். இதன் வாயிலாக, அன்புமணியை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, ரஜினி முன்வர வேண்டும் என, ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கிடையில், ரஜினி ரசிகரும், கர்நாடக மாநிலத்தில், அதிரடி போலீஸ் அதிகாரி என, பெயர் எடுத்தவருமான, துணை கமிஷனர் அண்ணாமலை, அரசியலுக்கு வரவிருக்கிறார்.

கர்நாடக மக்களால் நேசிக்கப்பட்ட அண்ணாமலை, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தன் ஐ.பி.எஸ்., பணியை துறந்துள்ள அவர், ரஜினி கட்சி துவக்கியதும், அவருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். விவசாயம், இளைஞர் முன்னேற்றம் தொடர்பான கொள்கையில் ஆர்வமிக்க இளைஞரான அண்ணாமலையை, முதல்வர் வேட்பாளராக, ரஜினி அறிவிக்கலாம் என்ற தகவல், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.பதிலடிஅதேசமயம், சமூக வலைதளங்களில், அண்ணாமலையை பற்றிய எதிர்மறையான விமர்சனங்களையும், ஒரு முக்கிய கட்சியின், ஐ.டி., அணியினர் பதிவிட்டுள்ளனர்.அதற்கு, அந்த அண்ணாமலை, 'தோட்டாக்களுக்கு பயப்படாதவன்; விமர்சனத்திற்காக பயப்படவா போகிறேன்' என, பதிலடி கொடுத்துள்ளார்.இதற்கிடையில், 'அடுத்த முதல்வர் யார்' என்ற கேள்வியை மையப்படுத்தி, மாநகரம், நகரங்களை உள்ளடக்கிய, 100 சட்டசபை தொகுதிகளில், டில்லியை சேர்ந்த நிறுவனம், 'சர்வே' எடுத்துள்ளது. அந்த சர்வே அறிக்கையில், ௮௫ சதவீதம் பேர், ரஜினி கட்சி துவக்கினால், அவர் முதல்வராவார் என்றும், ரஜினி கட்சி துவக்கவில்லை என்றால், தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்றும் கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த சர்வே முடிவை, ரஜினியிடம், அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் அளித்ததும், அவர் உற்சாகம் அடைந்துள்ளார்.இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறியதாவது:ரஜினி கட்சி துவக்கிய பின், மக்கள் விருப்பத்தின்படி, தன்னை முதல்வர் வேட்பாளராக, ரஜினி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.அதே சமயம், தன் நீண்ட கால நண்பரான கமல், அன்புமணி மற்றும் அண்ணாமலை போன்றவர்களில் ஒருவரை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா என்ற, கேள்வியும் நீடிக்கிறது. இதற்கு, அவர் கட்சி துவக்கிய பின்னரே பதில் கிடைக்கும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.ரஜினியுடன் கூட்டணி: அ.தி.மு.க., வியூகம்!'மெகா' கூட்டணி அமைத்து,சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அ.தி.மு.க., தரப்பிலும் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., மற்றும் ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலை சந்திக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. ரஜினியும், அதை ஆதரிப்பதாக தெரிகிறது. ஆனால், முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த வேண்டும் என்பதில், முதல்வர் இ.பி.எஸ்., உறுதியாக உள்ளார்.

அவரும், தன்னை முதல்வர் வேட்பாளராக, பா.ஜ., ஏற்க வேண்டும் என, வலியுறுத்துகிறார்.இதனால், தேர்தல் முடிவுக்கு பின், முதல்வரை முடிவு செய்யலாம் என்ற அடிப்படையில், கூட்டணி உருவாக்கும் முயற்சி நடக்கிறது. ரஜினியின் கட்சிக்கு நிதியுதவி உள்ளிட்ட, சகல வசதிகளை செய்து தரவும், அ.தி.மு.க., தயாராக உள்ளது. 'இந்த கூட்டணி, மெகா கூட்டணி என்பதால், வெற்றியை தேடி தரும்; தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுக்க முடியும்' என, அமைச்சர்கள் கருதுகின்றனர். எனவே, திரைமறைவில், மெகா கூட்டணி அமைப்பதற்கு, ஆளுங்கட்சி தரப்பிலும், ரஜினி தரப்பிலும் பேச்சு நடந்து வருவதாக தெரிகிறது. - நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
16-ஆக-202000:59:07 IST Report Abuse
Aarkay Power Play....
Rate this:
Cancel
R.Selvaperumal - kuwait,குவைத்
15-ஆக-202015:25:48 IST Report Abuse
R.Selvaperumal இது ரஜினிக்கு தெரியுமா ......
Rate this:
Cancel
Suburam - USA ,யூ.எஸ்.ஏ
15-ஆக-202012:12:36 IST Report Abuse
Suburam அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையுமே ஒழிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X