நடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அட்மிட்| Actor Sanjay Dutt admitted to Lilavati Hospital after complaining of breathlessness | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அட்மிட்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (2)
Share
Sanjay Dutt, admitted, Mumbai, hospitalised, Lilavati hospital, actor, bollywood

மும்பை: மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், 60 இரவு அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு டாக்டர்கள் ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டனர். இதில் கொரோனா தொற்று இல்லை.


latest tamil news



சிறிது மூச்சுவிடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவரை ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவரை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியது, நான் நலமாக உள்ளேன். மருத்துவர்கள் ஆலோசனைபடி சிகிச்சையில் உள்ளேன். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவேன் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X