பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,866 ஆனது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 63 சதவிகிதமானது.



latest tamil news


இருப்பினும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,120 ஆனது. ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 106 ஆனது.

அதிக பட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 485 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 173 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 169 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 114 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 101 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 73 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 64 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 57 பேருக்கும், இடுக்கி மற்றும் கொல்லம் மாவட்டங்களில் தலா 41 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 39 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 39 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 15 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 10 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது.

நேற்று ஆக.,08 நோய் பாதிப்பு அடைந்தவர்களில் 108 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 60 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். 1,216 பேருக்கு கொரோனா நோயாளிகளின் தொடர்பில் தொற்று ஏற்பட்டுள்ளது. 92 பேருக்கு தொற்று யார் மூலம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 1,48,241 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.


latest tamil news


அவர்களில் 1,36,307 பேர் வீடுகளிலும், 11,394 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,714 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 498 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
09-ஆக-202010:41:20 IST Report Abuse
Balasubramanian Ramanathan கேரளாவை பாருங்கள். மனம் மகிழுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X