சீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

அமெரிக்கா தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப் கனடாவின் அலுமினியம் உள்ளிட்ட தாது பொருட்களுக்கு வரி விதிப்பதாகத் தெரிவித்தார்.



latest tamil news



இதனால் அதிர்ச்சி அடைந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அமெரிக்கா தொடர்ந்து இதுபோல உலக நாடுகள் பலவற்றுடன் பகையை வளர்த்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது என அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வட அமெரிக்க பொருளாதார ஒப்பந்தத்தை மீறி டிரம்ப் அரசு செயல்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார்.


latest tamil news



இந்த ஒப்பந்தம் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடையே போடப்பட்டது. அமெரிக்கா தன்னை அமெரிக்க நாடுகளில் பெரிய நாடாக காட்டிக்கொள்ள இவ்வாறு செய்கிறது என கனடா குற்றம் சாட்டுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஆக-202018:55:29 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடகண்றாவியெ ந்தாலுக்கென்ன ஆச்சு , பாவமுங்கோ யு எஸ் ஏ மக்கள் ,சனிதசை பிடிச்சுக்குழுக்குது மக்களை என்பது தெளிவாக தெரியுதே . நிச்சயம் 98% தோல்வியைத்தான்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
09-ஆக-202010:34:54 IST Report Abuse
 N.Purushothaman ட்ரம்ப் செய்வது சரி தான் ..சமீப காலமாக கனடா போக்கு அந்நாட்டின் நடவடிக்கையை உற்று நோக்குபவர்களுக்கு தெரியும் ..ட்ரம்ப் பொறுத்தவரை ராஜதந்திரத்தை சற்று அதிரடியாக செய்வதால் சில எதிர்ப்புக்கள் எழுகிறது ..ஆனால் உள்நாட்டு மக்களிடம் அவரின் தேசியவாத நடவடிக்கைக்கு பலத்த வரவேற்பு உள்ளது ..
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-ஆக-202009:08:00 IST Report Abuse
DARMHAR சர்வாதிகாரியாக செயல் படுகிறார் டிரம்ப்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X