பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் இதுவரை 89,238 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 89,238 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 52 சதவிகிதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,72,102 ஆக உயர்ந்தது. மேலும் 93 பேர் பலியானதால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை மாநில அளவில் 3,091 ஆக உள்ளது.

பெங்களூருவில் மட்டும் நேற்று ஆக.,8 ஒரே நாளில் மேலும் 2,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பெங்களூருவில் மட்டும் இதுவரை மொத்தம் 72,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் மட்டும் 14,391 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கொரோனாவால் பாதிப்பு அடைந்ததால் அவர் தற்போது மனிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைத் தொடர்ந்து சித்தராமையாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X