சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் வினியோகம்

Added : ஆக 09, 2020
Share
Advertisement
 கந்தசஷ்டி கவசம்  புத்தகங்கள் வினியோகம்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.,வினர் கந்தசஷ்டி கவச புத்தகங்களை வீடு மற்றும் கடைகளில் வினியோகித்தனர்.

கடவுள் முருகனை இழிவுபடுத்தியோரை கண்டிக்கும் வகையில் ஹிந்து அமைப்பினர் பல்வேறு வகைகளில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் சிந்திக்க வைக்கும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி துண்டுப் பிரசுரங்களை புத்தக வடிவில் வழங்கி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரத்தில் பா.ஜ., மற்றும் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பினர் வீடுவீடாக, கடைகள் தோறும் சென்று வினியோகித்தனர்.சஷ்டி நாளில் வீடுதோறும் பாராயணம் செய்யவும், வீதிதோறும் முருகக் கடவுள் படம் வைத்து வழிபடவும் பிரசாரம் செய்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச்செயலாளர் சரவணமுத்து தலைமை வகித்தார். பொருளாளர் ராஜ்வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சேதுராஜ், இணைச் செயலாளர் மகேந்தின், பா.ஜ., மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா, நகரத் தலைவர் சிவா, பொதுச்செயலாளர் ராஜலிங்கம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X