பொது செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' பெறுவது எளிது: சொல்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
 'இ - பாஸ்' ,எளிது: சொல்கிறார் மாநகராட்சி கமிஷனர்


சென்னை :''சென்னையில், 'இ - பாஸ்' பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை அளித்து, பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இடைத்தரகர்களை நாட வேண்டாம்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

சென்னை அயனாவரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசிய தாவது: கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி, ஒரு லட்சத்து, 7,109 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில், 87.5 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் இறப்பு விகிதம், 2.1 சதவீதமாக உள்ளது. அதை, 1.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




சென்னையில், கொரோனா தொற்று இரட்டிப்பாக எடுத்துக் கொள்ளும் காலம், ஆரம்பத்தில், 5 நாட்கள்; 14 நாட்கள்; 41 நாட்கள்; 64 நாட்கள் என, இருந்தது. தற்போது, 72.24 நாட்களாக அதிகரித்துள்ளது. அதாவது, இரண்டரை மாதங்கள் ஆகிறது. 'இ - பாஸ்' பெறுவதை, இரண்டு வகையில் எளிமைப்படுத்தி உள்ளோம். திருமணம், இறப்பு, மருத்துவத்துடன் தொழில் ரீதியாக வந்து செல்வதற்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து செல்வதற்கும், இணையத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல், 'இ - பாஸ்' பெற விண்ணப்பித்தால், குறுஞ்செய்தி வாயிலாக தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தும் நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, முறையாக, இ - பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, இடைத்தரகர்களை அணுக வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-ஆக-202019:56:32 IST Report Abuse
Nagarajan D திருட்டு அரசு ஊழியர்களும் திருட்டு அரசியல் வியாதிகளுக்கும் எல்லாவற்றிலும் ஊழல் செய்து பழகி விட்டது, எனது நண்பன் கடந்த 45 நாட்களாக வேலை நிமித்தமாக கோவையிலிருந்து ஆத்தூர் சென்று வர ஊழல் திட்டத்தில் உள்ள E Pass அப்ளை செய்து செய்து கிடைக்கவில்லை. நாட்டில் நடவுக்கு அனைத்து ஊழலுக்கும் அரசு ஊழியர்களே காரணம்
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-ஆக-202015:16:19 IST Report Abuse
Pannadai Pandian கொரோனாவிலும் காசு பார்க்கும் அதிகாரிகள், அரசு இது. ஈபாஸ் அப்பளை செய்து பார்த்தால் தெரியும் கிடைக்காது என்று.....காசு வெட்டினால் காரியம் நடக்கும். போலீஸ் மனிதாபத்தோடு செக் போஸ்ட் இரு பக்கமும் உள்ள மக்களை வேலைக்கு அனுமதிக்கிறார்கள்.. அவர்களிடம் ஈரம் உள்ளது மனதில்.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
09-ஆக-202015:15:14 IST Report Abuse
Raj கிடைத்தவரை சுருட்டி கொண்டு செட்டில் ஆகும் ஆளும் கட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X