பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் 1.5 லட்சம் கனஅடி நீர் திறப்பு

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
karnataka dams, water release, mettur dam, water level, dams, கர்நாடகா அணைகள், நீர் திறப்பு, 1.5 லட்சம் கனஅடி, விநாடிக்கு, மேட்டூர் அணை, நிரம்பும், ஒரு வாரம்

மேட்டூர்: கர்நாடகா அணைகளில், 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து, 3ம் ஆண்டாக, மேட்டூர் அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், கபினி அணை நிரம்பியதால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 60 ஆயிரம் கன அடியாக இருந்த, உபரி நீர் திறப்பு, நேற்று, 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று முன்தினம், 30 ஆயிரம் கன அடியாக இருந்த, கே.ஆர்.எஸ்., அணை நீர் திறப்பு, நேற்று, 74 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர் இருப்பு, 40 டி.எம்.சி.,யாக உள்ளது. ஓரிரு நாளில் அணை நிரம்பும் என்பதால், அதன்பின் வரும் உபரி நீர் முழுமையாக, காவிரியாற்றில் வெளியேற்றப்படும். இதுதவிர, மைசூரு மாவட்டம், நுகு அணையில் இருந்து, நேற்று காவிரியில், 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கபினியில், 70 ஆயிரம், கே.ஆர்.எஸ்.,சில், 74 ஆயிரம், நுகுவில், 6,000 கன அடி என, 1.50 லட்சம் கன அடி நீர், காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், இன்று இரவு மேட்டூர் அணையை வந்தடையும்.


latest tamil news



இதனால், வரும் நாட்களில், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும். கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் தொடர்ச்சியாக வருவதால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 43 ஆயிரம் கன அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. வினாடிக்கு, 1 லட்சம் கன அடி நீர் தொடர்ச்சியாக வரும் பட்சத்தில், மேட்டூர் அணை, ஒரு வாரத்தில் நிரம்பும்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202014:39:28 IST Report Abuse
ஆப்பு எல்லாத்தயும் சமாளிக்கத் தயார்னு இன்னும் யாரும் அறிக்கை உடலியே...
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
09-ஆக-202013:20:55 IST Report Abuse
Rameeparithi கொரானா கொடுமையில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வருண பகவான் கருணை காட்டியுள்ளார். வாழ்வாதாரமான விவசாயம் நிற்கவில்லை. இ பி ஸ் ஆட்சி அதிர்ஷ்டம் கொண்டிருக்கிறது
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்மேலாண்மையை சிறப்பாக செய்திருந்தால் நிச்சயம் அதிகப்படியான நீரை நாம் இப்போது தேக்க முடியும்? காவிரியின் ஒவ்வுறு ஒரு கிலோமீட்டருக்கு இடையில் ஒரு 3 அடி முதல் 6 அடி வரை தடுப்புகள் அமைக்கவேண்டும் என்பது என்னுடைய மிக நீண்ட நாள் கோரிக்கை இதன்மூலம் நிச்சயமாக நாம் 10 அணைகளுக்கு மேலான நீரை தேக்கமுடியும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க, உயர்த்த முடியும் என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X