பொது செய்தி

இந்தியா

எல்லையில் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு: இந்திய படைகள் தயார் நிலை

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
military officers, talk, ladakh border, india, military, china, ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு, லடாக் எல்லை, இந்திய ராணுவம் தயார் நிலை

புதுடில்லி; கிழக்கு லடாக் எல்லையில், படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக, இந்திய -- சீன ராணுவ மூத்த அதிகாரிகள் இடையே, நேற்று பேச்சு நடத்தப்பட்டது.

கிழக்கு லடாக்கில் உள்ள, இந்திய - - சீன எல்லைப் பகுதியில், இரு நாட்டு படைகளுக்கு இடையே, கடந்த சில மாதங்களாக, பதற்றம் நிலவி வருகிறது. 'வாபஸ்' பெறவில்லைஎல்லையில், இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, போர் மூளும் அறிகுறிகள் தென்பட்டன.எல்லையில், அமைதியை நிலைநாட்ட, இரு நாட்டு ராணுவ மூத்த அதிகாரிகள் மட்டத்தில், ஐந்து கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன.

அதன் பின்னும், சீன தரப்பு, தங்கள் படைகளை முழுமையாக, 'வாபஸ்' பெறவில்லை.கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில், சீன படைகள் பின் வாங்கின. ஆனால், பாங்காங் ஸோ, கோக்ரா, தேப்சாங் ஆகிய இடங்களில் உள்ள, 'பிங்கர் -- 4' முதல் 'பிங்கர் -- 8' வரையிலான பகுதியில், சீன படைகள், திரும்ப பெறப்படவில்லை.அப்பகுதிகளில் உள்ள படைகளை திரும்ப பெறுமாறு, சீனாவிடம், இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது.

அதற்கு சீனா செவி சாய்க்காததை அடுத்து, நம் ராணுவமும், படைகளை திரும்பப் பெற மறுத்தது.இந்நிலையில், இரு நாட்டு ராணுவ மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சு, சீன பகுதியில் உள்ள, தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்தில், நேற்று நடந்தது.அப்போது, தெப்சாங், தவ்லத் ஓல்டி உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, படைகளை திரும்ப பெற, இந்திய தரப்பு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, லடாக் எல்லைப் பகுதி, வடக்கு சிக்கிம், உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் ஆகிய பகுதிகளில், நம் ராணுவம் மற்றும் விமானப்படையினர், அதிகபட்ச தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், தற்போது கடும் குளிர் நிலவுவதால், ஆயுதங்கள், குளிர் பாதுகாப்பு ஆடை மற்றும் உபகரணங்கள், தேவையான அளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202017:40:53 IST Report Abuse
J.V. Iyer அவர்களை அடித்து விரட்டவும்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஆக-202016:08:34 IST Report Abuse
தமிழ்வேல் பிரதமர் அவரது நண்பனுக்கு போன் பன்னி எல்லையில் என்ன நடக்குதுன்னு கேட்டாரா ?
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
09-ஆக-202013:40:24 IST Report Abuse
Indian  Ravichandran இந்தியா தேசம் ராணுவம் எச்சரிக்கையாக எப்போதும் இருக்க வேண்டும், சப்பை மூக்கன் சும்மா இருக்கமாட்டான். ராணுவ வீரர்களுக்கு போதிய பலம் வாய்ந்த ஆயுதம் மற்றும் குளிர்தாங்கும் உடைகல் நிறையக்கொடுப்பது அவசியம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X