பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 5 இடங்களில் டேபிள் டாப் விமான நிலையங்கள்: ஏஏஐ அதிகாரி

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியா முழுவதிலும் டேபிள்டாப் ஓடுபாதைகள் கொண்ட விமானநிலையங்கள் 5 இடங்களில் உள்ளன என இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.latest tamil newsகடந்த 7 ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானி உட்பட 19 பேர் வரை பலியாகினர். இச்சம்பவம் குறித்து ரஷ்யா, அமெரிக்கா,பாக்., உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விமான நிலையத்தின் ஒடுதளம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அர்விந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோழிக்கோடு விமானநிலையத்தின் ஓடு பாதை டேபிள் டாப் வகையை சேர்ந்தது. இத்தகைய ஓடுபாதைகள் விமானிகளுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தகூடியவை.


latest tamil newsநாட்டில் மொத்தம் 5 இடங்களில் டேபிள் டாப் வகை விமான ஓடுதளம் அமைந்துள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு, இமாச்சல பிரதேசம் சிம்லா , சிக்கிம் மாநிலத்தின் பாக்கியோங் மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் ஆகியவையாகும்.

இவற்றில் முதல் நான்கு விமான நிலையங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் அந்தமாநில அரசின் கட்டுப்பாட்டில்இயங்கி வருகிறது.

கடந்த 2010 ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை அறிக்கையில் அச்சமயத்தில் மூன்று இடங்களில் மட்டுமே டேபிள் டாப் விமான ஓடுதள பாதை உள்ளதாக கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த வகை ஓடுதள பாதை கொண்ட விமானநிலையங்களின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஆக-202010:08:20 IST Report Abuse
Sampath Kumar kann kaetta pinpu surya namaskaram ithae pulappu
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
09-ஆக-202018:44:03 IST Report Abuse
Viswam ஆட்டோ பைலட் மூலமாக விண்ணில் பறக்கும் விமானம், ஏறுவதற்கும் இறங்குவதற்கும் விமானி திறமையை சார்ந்துள்ளது. சிக்கலான ஓடுபாதை அமைப்பு , மழை அல்லது புகை மற்றும் பனிமூட்டம், லோ விசிபிலிட்டி, மற்றும் ஓடுபாதையில் தேங்கும் மழைநீர் இவையெல்லாம் விமானம் இறங்கும்போது விமானியை திணறவைக்கும் .மிகவும் திறமையான சீனியர் பைலட் விமானத்தை செலுத்தியுள்ளார். துரதிருஷ்டவசமான விபத்து நடந்துள்ளது. முடிந்த வரை உயிரை கொடுத்து போராடி சேதத்தை குறைத்துள்ளார். இறந்த விமானிகளுக்கு மற்றும் பயணிகளுக்கு நமது பிரார்த்தனைகள். மங்களூரில் விபத்து நடந்த பிறகும் விமான தளத்தை மூடவில்லை, இப்போது கோழிக்கோட்டில் நடந்த விபத்திற்கு பிறகும் கேரளத்தின் மலப்புர மாப்பிளை சேட்டன்கள் இதை மூட விடமாட்டார்கள். வளைகுடா நாடுகள் கேரள சேட்டன்களை மொத்தமாக திருப்பிஅனுப்பினால்தான் பயணிகள் போக்குவரத்து குறைந்து இந்த மாதிரி விமானதளம் மூடும் நிலைக்கு வரும் . அதுவரை நாம் பேசி பிரயோஜனமில்லை.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
09-ஆக-202014:20:34 IST Report Abuse
தமிழ் மைந்தன் வட கிழக்கு மாநிலங்களில் டேபிள் டாப் விமான நிலையங்கள் இருப்பது சரி..... வேறு வழி இல்லை.....ஆனால் கேரளாவில் இது தேவையில்லை.......இது போன்றவை தங்கம் கடத்த மட்டுமே உதவும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X