ரூ.1 லட்சம் கோடி திட்டம்: இன்று அறிவிப்பு

Added : ஆக 09, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
 ரூ.1 லட்சம் கோடி திட்டம்: இன்று அறிவிப்பு, Agri-infra fund, PM Modi, financing facility, india, finance, New Delhi, Agriculture, Infrastructure, Fund

புதுடில்லி வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கிறார்.

வேளாண் உள் கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு, குளிர்சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள் போன்ற விவசாய சொத்துக்களை உருவாக்குவதற்கு, இந்த நிதி ஊக்கமளிக்கும்.விவசாயிகள் தங்கள் பொருட்களை அதிகளவில் சேமித்து வைப்பதன் மூலம், பொருட்கள் வீணாவதைக் குறைக்க முடியும்.


latest tamil news
ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி திட்டத்திற்காக, 12 பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிகள், விவசாயிகள் நலத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.பிரதம மந்திரியின் விவசாய நல நிதி திட்டத்தின் கீழ், 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் நேரடியாக வழங்கப்பட்டு உள்ளது.
ஆறாவது தவணையாக, 8.5 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் 17 ஆயிரம் கோடி ரூபாயை இன்று ஒதுக்குகிறார்.இந்நிகழ்ச்சி, நாடு முழுதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் பங்கேற்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09-ஆக-202011:16:20 IST Report Abuse
பாமரன் வழக்கம் போல அறிவிப்பு அறிவிப்பா தான் இருக்கோணும் சொல்லிப்புட்டேன்.. எதாவது தொடக்கவிழான்னா அது முந்தைய அரசு செஞ்சதில் பெயிண்ட் அடிக்கற வேலை... (எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு டீம்காதான்...). நானும் ஏதோ மத்திய அரசின் நிதி செலவு திட்டமோன்னு பார்த்தால் வழக்கம் போல கடன் வழங்கும் திட்டம்... இந்த சேட்டுங்க கைல நாடு போய் வட்டி கடையா மாறுனதுதான் மிச்சம்...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
09-ஆக-202010:57:47 IST Report Abuse
konanki உபிஸ் கதறல் அதிகமாகவே ஒலிக்கும். இறந்த தலைவர் சமாதியில் "தலைவா எழுந்து வா "என்று கோஷம் போட்ட ஒரிஜினல் அக்மார்க் பகுத்தறிவு கூட்டம் 9 வருஷமா தண்டித்தது போதாதா? என்று புலம்பும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
09-ஆக-202009:53:52 IST Report Abuse
GMM விவசாயத்திற்கு அடித்தளம் தண்ணீர். நவீன விவசாயக்கருவிகள், புதிய தொழில் நுட்பம் விவசாய உற்பத்திக்கு போதுமானவை. கிணற்றுநீர் பாசனம் போன்றவை நிலத்தடி நீர்க்குறைவினால் சிரமமாகிறது. கங்கை காவேரி போன்ற நதிநீர் திட்ட இணைப்பு தேவை. நிலத்தடி நீர் மிகவும் குறைந்து வருகிறது (இஸ்ரேல் நாடு hydrologist ன் உதவியாளராக வேலை செய்யும் போது ground water நீரோட்ட திசை அறிந்து குளங்கள் ஆறுகள் இணைக்க அறிய முடிந்தது) இந்திய வடக்கு உயரமாகவும் தெற்கு தாழ்வாகவும் இருப்பதால் கங்கை காவேரி இணைப்பு சாத்தியமே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X