பொது செய்தி

தமிழ்நாடு

மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி; மின் சப்ளை இல்லாததால் அதிருப்தி

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
நீலகிரி, மழைஅளவு,  கூடலூர், மின்சாரம், மின்சப்ளை, nilgiris, Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather

ஊட்டி: நீலகிரியில், கடந்த ஒரு வாரம் வீசிய பலத்த காற்றின் வேகம் குறைந்தது . நேற்று மாலை மீண்டும் துவங்கிய மழை இரவு முழுவதும் பரவலாக பெய்தது. சாலையின் குறுக்கே மரம் ஏதும் விழவில்லை. போக்குவரத்தில் பாதிப்பில்லை. கிண்ணக்கொரை, எமரால்டு, இத்தலார், அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா சாலைகளில் சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், தயார் நிலையில் வைக்கப்பட்ட பொக்லைன் உதவியுடன் உடனுக்குடன் அகற்றப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் சராசரி மழை அளவு குறைந்துள்ளது. மிதமான மழையுடன் கடும் குளிர் நிலவுகிறது.


latest tamil news


கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது. ஆனால், நேற்று முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால், ஆறு நாட்களாக மின் சப்ளை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.


மழை அளவு


ஊட்டி : 29 mm
நடுவட்டம் : 34 mm
கிளென்மார்கன் : 34 mm
கல்லட்டி : 14 mm
மசினகுடி : 3 mm
குந்தா : 15 mm
அவலாஞ்சி : 34 mm
எமரால்ட் : 16 mm
கெடாய் : 19 mm
கிண்ணக்கொரோய் : 21.5 mm
அப்பர்பவானி : 28 mm
பலகோலா : 18 mm
குன்னூர் : 24.5 mm
கேத்தி : 11 mm
பர்லியார் : 30 mm
குன்னூர் புறநகர் : 5.5 mm
யெடப்பள்ளி: 60 mm
ஹெலிகல் : 20 mm
கோத்தகிரி : 13 mm
கோடநாடு : 15 mm
கீழ் கோத்தகிரி. : 10 mm
கூடலூர் : 30 mm
தேவாலா : 102 mm
அப்பர் தேவாலா : 25 mm
ஓ வேலி: 13 mm
செருமுளி. : 22 mm
பந்தன்துரை : 13 mm
பந்தலூர் : 40 mm
சேரன்கோடு : 17 mm

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-ஆக-202018:40:44 IST Report Abuse
madhavan rajan அங்கு சாதாரணமாகவே (சம்மரில் கூட) ஹீட்டர் வேண்டும். இப்போது மழை குளிர். மின்வசதி இல்லாவிட்டால் மிகவும் கொடுமை.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
09-ஆக-202010:39:56 IST Report Abuse
sundarsvpr மின் பாதிப்பு தவிர்க்க இயலாது.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
09-ஆக-202009:28:49 IST Report Abuse
Chandramoulli அரசியல்வாதிகள் இயற்கையுடன் விளையாடி மரம் , காடுகளை அழித்ததின் விளைவு தான் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X