கொரோனா நோயாளிகள் இருந்த ஹோட்டலில் தீ விபத்தில் 11 பேர் பலி: மோடி இரங்கல்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Andhra, Vijayawada, Fire,   PM Modi, Amitshah,  Andhra Pradesh, COVID-19 care centre, ஆந்திரா, விஜயவாடா, தீவிபத்து, மோடி, அமித்ஷா, இரங்கல்

விஜயவாடா: ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டல் ஒன்றில் இன்று (ஆக.,09) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 11பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஹோட்டல் ஒன்று கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், மின் கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news





மோடி இரங்கல்



தீ விபத்து குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி: விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் நினைவாக எனது எண்ணங்கள் அனைத்தும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். தற்போதைய நிலை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுடன் விவாதித்தேன். அனைத்து உதவியும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



latest tamil news




அமித்ஷா வெளியிட்ட இரங்கல் செய்தி


ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய செய்தி, மிகுந்த வேதனையளிக்கிறது. மாநில அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். துயரமான இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களை விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-202006:15:05 IST Report Abuse
Mani . V அது எப்டின்னுனே தெரியவில்லை, கொரோனா நோயாளிகள் இருக்கும் ஹோட்டலும், மருத்துவமனைகளும் தீ வைத்து எரிக்கப்படுகிறது ஸாரி தீ பிடித்து எரிகிறது? என்றே புரியவில்லை.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஆக-202019:03:48 IST Report Abuse
Endrum Indian 5 ஸ்டார் ஹோட்டலாம் மின்கசிவாம் தீ பற்றிக்கொண்டதாம் இந்த சப்பைக்கட்டுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. இதற்கு பின்னே யார் என்று காரணம் அறிந்தால் அதன் உண்மை விளங்கும் வேறு தீ பற்றுது???
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
09-ஆக-202016:15:46 IST Report Abuse
vnatarajan மின்கசிவு காரணத்திற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து அவர்கள்மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X