சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

உண்டியலில் போட்ட பணத்தை திருப்பி கொடுக்க முடியுமா?

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
உண்டியலில் போட்ட பணத்தை திருப்பி கொடுக்க முடியுமா?

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்காக, முன்னரே வாங்கிய கட்டணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது; அதற்கான சாத்தியம் இல்லை. எனினும், இதுகுறித்து ஆராயப்படும்.


'தேர்வு நடந்தால் தானே செலவாகும்; வங்கியில் இருக்கும் கட்டண பணத்தை கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது; உண்டியலில் போட்ட பணத்தை திருப்பி கொடுக்க முடியாது எனக் கூறுவதை போலல்லவா இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, அதற்கான அறங்காவலர் குழு தான் செய்ய வேண்டும் என்பது தான், உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை மீறி, பிரதமர், மாநில கவர்னர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கூடி, சட்டவிரோதமாக அடிக்கல் நாட்டியுள்ளனர்.


'குற்றம் கண்டுபிடித்து, பெயர் வாங்கும் புலவர் நீங்கள். எனினும், உங்கள் கருத்து எடுபடப் போவதில்லை...' என, சொல்லத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி அறிக்கை.தமிழகத்தில் இதுவரை, ஆறு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இயங்காததால், பணிக்கு வர வேண்டாம் என, மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. எனினும், தாமதமாகவே அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. இதனால், மாற்றுத் திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்; ஊரடங்கு நீட்டிக்கும் போது, உடனே, இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.


'நியாயமான கோரிக்கை தான்; அரசு பரிசீலிக்கும்...' என, ஆறுதல் கூறத் தோன்றும் வகையில், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி அறிக்கை.தற்போதைய சூழலில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பில்லை. திறப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததும், எந்த தேதியில் பள்ளிகள் திறப்பது என்பது குறித்து, முதல்வர் முடிவெடுப்பார்.


'பள்ளிக்கூடங்களில், பாம்பு, கரையான் புற்றுகள் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.பா.ஜ.,வுக்கு, நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு கரும்புள்ளி. பா.ஜ.,வினரே அவரை, தங்கள் கட்சிக்காரர் என சொல்வதில்லை. நடிகர் வடிவேலு, 'ஏய், நானும் ரவுடி தான்...' என, படத்தில் அவர் சொல்வது போல, 'நான், பா.ஜ.,காரன்' என, எஸ்.வி.சேகர் கூறி வருகிறார்.


'அ.தி.மு.க., கொடியை மாற்றச் சொன்ன அவரை, அதகளம் பண்ணி விட்டீர்களே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் பின்பற்றப்படும்; மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதை அவர், அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்; அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.


'எப்படியும், அவரை சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா...' என, மடக்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு, நீதிமன்றம் சென்றுள்ளது போல, தயாரிப்பாளர்கள் சங்கமும், கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இரு தரப்பினரும் அமைதி பேச்சுக்கு தயாரானால், சுமுக தீர்வு காண, அரசு தயாராக உள்ளது.


latest tamil news

'அரசுக்கு வேற வேலை இல்லையா; சினிமா சங்கங்களுக்கு இடையேயான சண்டையை சமரசம் செய்ய துடிக்கிறதே...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி.வன்னியர் சமூகத்தினருக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், பா.ம.க., 17 சதவீதம் கேட்கிறது. 15 சதவீதம் கிடைத்து விட்டால், வன்னியர்களை மையப்படுத்தி, அரசியல் செய்வதற்கு எதுவும் இருக்காது என்பதால், இடஒதுக்கீட்டை கிடைக்க விடாமல், ராமதாஸ் தடுத்து வருகிறார்.


'இது, உட்கட்சி விவகாரம் போல, ஜாதிக்குள் உள்ள உள்குத்து; உண்மை யாருக்கு தெரியும்...' என, விரக்தியை வெளிப்படுத்த தோன்றும் வகையில், வன்னியர் கூட்டமைப்பு தலைவர், ராமமூர்த்தி பேட்டி.அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உடனே வழங்க, 50 கோடி முட்டைகள் தயாராக உள்ளன என, கோழி பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, 10 லட்சம் மாணவர்களுக்கும், 15 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் முட்டைகளை வழங்க உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


'பள்ளிகள் திறக்கப்படவில்லையே; வீடு வீடாக முட்டை வினியோகிக்க சொல்கிறீர்களா...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.ராமர் கோவில் கட்டுவதன் மூலம், இந்தியாவின் சுயமரியாதை, கலாசாரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த, 500 ஆண்டுகளாக நடந்த போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே, ராமர் கோவில் கட்டப்படுகிறது. கோவில் கட்டப்படுவதை, காங்., கட்சியும் வரவேற்றுள்ளது.


'உண்மை தான். அதனால் தான், இதுவரை எதிர்ப்பு குரல் கிளம்பவில்லையோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஆக-202013:47:05 IST Report Abuse
Bhaskaran பெயர் சீதாராம் ( யெச்சூரி ) பேசுவது ராமனுக்கு எதிராக. ராமசாமி (பெரியாரின் )யின் அல்லக்கை போலிருக்கு
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
09-ஆக-202013:22:04 IST Report Abuse
Darmavan யெச்சூரி ஒரு சீன கைக்கூலி இது பற்றி பேச அருகதை இல்லாதவன்
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) கடம்பூர் ராஜு சினிமா பிரச்சினைகளுக்கு காட்டும் அக்கறையை சமூக பிரச்சினைகளுக்கு கொஞ்சமேனும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்... இந்துமதமும் கந்தனும் இழிவுபடுத்தப்படும்போது ஏற்படாத கவலை சினிமா பிரச்சினைகளுக்கு மட்டும் ஏற்படுவது என்ன மாதிரியான சமூக அக்கறை??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X