பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Atma nirbhar Bharat, rajnath singh, BJP, Rajnath, defence minister, ban, பா.ஜ,ராஜ்நாத் சிங்,rajnathsingh,

புதுடில்லி: சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகியுள்ளது. இதன்படி 2020 முதல் 2024 ம் ஆண்டிற்குள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 101 பாதுகாப்பு தளவாடங்களுக்கு படிப்படியாக தடை விதிக்கப்படும்.

இந்த 101 பாதுகாப்பு தளவாடங்களில் உயர்ரக தொழில்நுட்ப துப்பாக்கிகளான ஆர்ட்டிலரி கன், அசால்ட் ரைபிள்ஸ்ல கார்வெட், சோனார் சிஸ்டம், லகுரக ஹெலிகாப்டர்கள், போக்குவரத்துக்கான விமானம் , ரேடார்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும்.


latest tamil news


இந்திய பாதுகாப்பு துறையில் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து விவரிக்கவே, இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு, உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்கவும், உள்நாட்டுமயமாதலின் இலக்கை அடைய சிறந்த முஐறயில் தயாராக உதவும். அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு தொழில்கள் ஏறக்குறைய ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களை பெறும்.

ராணுவத்திற்கான எஎப்பி போர் வாகனத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்குவது 2021ம் ஆண்டிற்குள் நிறுத்தப்படும். இந்த வகையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனவங்களுக்கு கிடைக்கும்.கடற்படைசார்பில் வெளிநாடுகளில் இருந்து நீர்மூழ்கி கப்பல் இறக்குமதிக்கு 2021 டிச.,க்குள் தடை விதிக்கப்படும். அந்த வகையில் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

விமானப்படை சார்பில், எல்சிஏ எம்கே 1 ஏ லகுரக போர் விமானங்களை இறக்குமதி செய்வது 2020 டிச., மாதத்தோடு தடை செய்யப்படும். 123 விமானங்களுக்கான ஆர்டர்கள் ரூ.86 ஆயிரம் கோடி உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இனிமேல் நம்முடைய தேவைக்கு ஏற்றார்போல், வடிவமைத்து மேம்படுத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி னாருவாக்கலாம்.

உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை உதவும். தரைப்படை, விமானப்படை கடற்படை ஆகியவற்றிலிருந்து கடந்த 2015 முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வெளிநாடுகளில் இருந்து இறுக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அடுத்த 7 ஆண்டுகளில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட தளவாடங்கள்


latest tamil news


Advertisement


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202018:58:50 IST Report Abuse
SAPERE AUDE நல்லதொரு செய்தி. கண்டிப்பான கட்டுப்பாடுகளுடன், வெளி நாடுகளுக்கு போகும் பண விரையத்தை தடுக்கப்படும் நோக்கத்தில் எடுக்கப்படும் முயற்சி.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
09-ஆக-202017:32:51 IST Report Abuse
Chandramoulli எடுக்கப்பட்ட முடிவு நல்லவையே. இனிமேல் தயாரிக்கும் பொருள்கள் ஸ்டாக்கில் இருக்கும். நல்ல முயற்சி . வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஆக-202016:35:32 IST Report Abuse
தமிழ்வேல் இதுபோன்ற முக்கிய "(பாதுகாப்புப்)" பொருட்களுக்கு தடை விதிக்கும் முன், உள்நாட்டில் உற்பத்தி ஆரம்பிக்கப்படவேண்டும். ரோட்டில் குப்பை போடக்கூடாது, உபாதைகள் கழிக்கக்கூடாது.. என்றெல்லாம் சட்டம் போடும் முன் அதற்கான வழிகளை, முன் ஏற்பாடுகளை முன்பே செய்திருக்க வேண்டும். இதில் சில தடவாளங்களை இந்தியியாவிலேயே தயாரிக்க வெறும் 4 மாதங்களே தரப்படுகின்றது. பெரிய தடவாளங்களுக்கு 16 மாதங்கள் மிகவும் குறைவு.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
09-ஆக-202023:06:35 IST Report Abuse
Nallavan Nallavanமுன்னேற்பாடுகளை செய்திருக்கலாம் ........... விபரங்களை மறைக்க ராணுவ அமைச்சகத்துக்கு ஆர்டிஐ விலக்குண்டு ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X