பொது செய்தி

இந்தியா

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை; 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆழப்புலா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு, , இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.latest tamil news
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

இடுக்கி மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கரிங்குள் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மிகக்கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிவிட்டது. இதனால், 'தண்ணீரை சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு படிப்படியாக வெளியேற்றுங்கள்' என, தமிழக அரசுக்கு, கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு:நன்கு உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு முகமாக நகர்ந்து, தற்போது வடமேற்கிலும் அதை அடுத்துள்ள அரபிக்கடலின் வடகிழக்குப் பகுதியிலும் நிலைகொண்டுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு கேரளாவில் பரவலானது முதல் கனத்தமழையும், தனிப்பட்ட சில பகுதிகளில் மிக மிக கனத்த மழையும் பொழியும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிகமிக கனத்த மழை வரை ஆங்காங்கே பொழியும்.

ஆழப்புலா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே கொல்லம், பத்தம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


latest tamil newsகேரளாவில் கடந்த இரு நாட்கள் பெய்த கனமழைக்கு, சில பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது; பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைவெள்ளம் புகுந்துள்ள நிலையில், மேலும் இருநாட்களுக்கு மிகமிக கனமழை பெய்யும் என, அறிவித்திருப்பது கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
09-ஆக-202016:30:27 IST Report Abuse
Dr.T.Senthilsigamani கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'வருத்தம் தரும் செய்தி. ஏற்கனவே நிலச்சரிவு மற்றும் பெரு மழையால் பெருத்த உயிர்சேதங்களையும் ,பொருட்சேதங்களையும் கேரளா சந்தித்து வருகிறது .முதலிய இத்தகைய செய்திகளை படிக்கும் போது தமிழக மக்களுக்கு மனது கஷ்டமாகத்தான் உள்ளது ஆனால் இதெற்க்கெல்லாம் மற்றோரு காரணம் என கேரளா அரசியல்வாதிகளின் வறட்டு பிடிவாதமும் உள்ளது .ஆம் இத்தகைய உயிர்சேதம் மட்டுமல்ல கனமழை பெய்யும் நேரங்களில் மட்டுமாவது அத்தகைய உபரி நீரை கேரளா ,தமிழகத்திற்கு திருப்பி விட்டால் போதும் வெள்ளசேதங்களும் குறையும் என்ற செய்தியும் உண்மை தான் .ஏனென்றால் கேரளாவில் உள்ள அனைத்து ஆறுகளும் குறைந்த அளவு தூரம் ஓடி அரபிக்கடலில் வீணாக கலக்கின்றன.சமீபத்தில் கேரளா நீர்ப்பாசன துறை அமைச்சர் ஆண்டு தோறும் 2000 TMC அளவு நீர் அரபிக்கடலில் கலந்து வீணாகின்றன என்று பேசியிருந்தார் .ஆனால் அதை பசித்த வாயாக இருக்கும் தமிழகத்திற்கு ,தாகம் தீர்க்க மட்டும் தரவே மாட்டார்கள் .இந்த விஷயத்தில் தேசிய கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே தமிழக நலனை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கின்றன என்பதுதான் வேதனையான செய்தி. ஆனால், மின்சாரம், அரிசி, காய்கறி, பால், பழங்கள், மணல், ... என, அனைத்துக்கும் கேரளா தமிழகத்தை தான் நம்பியிருக்கும் .ஆனாலும் கேரளம் தொடர்ந்து தண்ணீரை தர முரண்படுவது தான் வேதனை - கேரளாவில் ஆற்று மணல் எடுக்க தடை பலவருடங்களாக உள்ளது .தமிழக ஆற்றுமணல் தான் கட்டடங்கள் கட்ட பயன்படுத்துகின்றனர் .மேலும்மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கேரளாவிற்கு தினமும் செல்கிறது. ஆனால் முல்லை பெரியாறு மட்டுமே கடந்த நூறு வருடங்களில் கேரளாவில் பாயும் ஆற்று நீரை - தேவைக்கு அதிகமான நீரை மட்டும் தமிழகத்திற்கு திருப்பி விடும் திட்டமாக வெற்றிகரமாக நிறைவேறப்பட்டுள்ளது .அதற்கும் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போட்டது கேரளா அரசு.அனைத்தையும் உச்சநீதி மன்றம் மூலம் தகர்த்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தான்.முல்லை பெரியாறு போன்று பல பொன்னான திட்டங்கள் - அதிகமான - கனமழை நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடும் திட்டங்கள் உண்டு .அதில் ஓன்று தான் பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம் .கேரளாவின், பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளின் உபரிநீரை, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் பாயும், வைப்பாறு நதியில் இணைத்து, வறண்ட அந்த மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஏராளமான வறண்ட பகுதிகளுக்கு, நீர்பாசன வசதி அளிப்பது மற்றும் 500 மெகாவாட் நீர்மின் திட்டத்தை துவக்குவது என்பது, 12 ஆண்டுகளுக்கு முன், மத்தியில் ஆட்சியில் இருந்த, பா.ஜ., அரசின் திட்டம். இதன் செயல்வடிவம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் போடப்பட்டது. இதற்காக, பம்பை - கல்லாறு நதியில், புன்னமேடு என்ற இடத்தில், 160 மீட்டர் உயர காங்கிரீட் அணை கட்டுவது. அது போல, அச்சன்கோவில் - கல்லாறு நதியில், சித்தார்மூழி என்ற இடத்தில், 160 மீட்டர் காங்கிரீட் அணை கட்டுவது. மேலும், அச்சன்கோவில் அருகே, 35 மீட்டர் உயரத்திற்கு, கிராவிட்டி அணை கட்டுவது. புன்னமேடு - சித்தார்மூழி அணைகளை இணைத்து, 5 மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8 கி.மீ., தூரம் தண்ணீரை கொண்டு சென்று, அங்கிருந்து கால்வாய் மூலம், 50.68 கி.மீட்டரில், வைப்பாறுக்கு கொண்டு செல்வது. இதற்காக, அந்த பகுதியில் உள்ள, அடவிநயினார் பகுதியில் உள்ள மேக்கரை அணையை, பயன்படுத்திக் கொள்வது என்பது தான் திட்டம்.பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டம். நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, 2002ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, முன்னுரிமை அடிப்படையில், எந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என, அப்போதைய ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு தலைமையிலான சிறப்பு குழு, மோடிஜி பிரதமரிடம் அளித்த அறிக்கையில், இந்த, பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டம் இருந்தது . கேரள அரசின் எதிர்ப்பையும் மீறி, இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என, 2003ல், பிரதமரிடம், நதிகள் இணைப்பு சிறப்பு குழு, இரண்டாம் திட்ட அறிக்கை தாக்கல் செய்தது. இந்த திட்டம் செயல்பட்டால் தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், 2.24 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, மூன்று போக பாசன ஆற்று நீர் பாசன வசதி கிடைக்கும்.மற்றும் அநேக நகராட்சிகளுக்கு - ஸ்ரீவில்லிபுத்தூர் ,ராஜபாளையம் ,சிவகாசி ,விருதுநகர் ,சங்கரன்கோவில் - தங்கு தடையின்றி குடி நீர் கிடைக்கும் .ஆனால் கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் முட்டுக்கட்டையால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை .அது மட்டுமல்ல அதற்க்கு முடிவுரையும் எழுதப்பட்டது கேரளா காங்கிரஸ் ஆட்சியில் .தினமலர் செய்தி டிசம்பர் 6,2014 - ம்: ''பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, கேரள அரசு, தொடர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததை அடுத்து, செயல்படுத்த உள்ள முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து, இந்த திட்டம் நீக்கப்பட்டு உள்ளது,'' என, கேரள முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான, உம்மன் சாண்டி, அம்மாநில சட்டசபையில் தெரிவித்தார்.ஆம் இந்த உண்மை கூட தெரியாத தமிழக மதசார்பின்மை கூட்டணியினர் தமிழகத்தில் எந்த பிரச்சனைக்கும் மோடிஜியே காரணம் எனக்கூறி பிழைப்பு நடத்துகின்றனர்.தற்போதைய கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசும் இந்த பொன்னான திட்டத்தை எதிர்ப்பது தான் வேதனையிலும் வேதனை .சில மாதங்களுக்கு முன்பு எனது வார்டில் குடிநீர் வராததிற்கு மோடிஜி அரசு தான் காரணம் என முட்சந்தியில் ஊளையிட்டும் ,ஓலமிட்டும் ,சாவு ஒப்பாரிகள் வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர். இதுதான் நிதர்சனம் .பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் .காவேரி பாய்ந்த தஞ்சை மாவட்ட நெல் களஞ்சியம் போன்று தென் மாவட்டங்களிலும் நெல் களஞ்சியம் என வத்திராயிருப்பு தொடங்கி கமுதி வரை கிணற்று பாசனம் இன்றி,ஆற்று பாசனம் மூலம் ,வறண்ட பூமியை பசுமை பூமியாக மாற்றும் நல்லதொரு திட்டம் பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம். இதனை நிறைவேற்ற கடவுள் தமிழக மக்களுக்கு அருள் புரியட்டும் .அதன் மூலம் கேரளாவில் வெள்ளசேதமும் குறையும்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09-ஆக-202017:51:49 IST Report Abuse
madhavan rajanஅரை நூற்றாண்டுக்கு மேலாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்து இருக்கும் திமுக தமிழக மக்களுக்கு நன்மை செய்ய உபயோகமில்லாத கட்சி மற்றும் ஆட்சி என்பது தெளிவாகிறது. இப்போது மத்திய அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் குறை கூறி தங்கள்தான் தமிழக மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல காட்டிக்கொள்பவர்கள் இந்த விஷயத்தில் என்ன செய்தார்கள் என்று மற்றவரை சுடலை கேட்பதுபோல அவர் ஒரு வெள்ளை அறிக்கை தரவேண்டும். சுயநலவாதிகள் பேச்சின மயக்கத்தில் காமராஜ் போன்ற தலைவர்களை துரத்தி அடித்த தமிழக மக்களுக்கு எப்போதுதான் புத்தி வரப்போகிறது....
Rate this:
nms - Madurai,இந்தியா
09-ஆக-202018:19:33 IST Report Abuse
nmsDr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா அவர்கள் கருத்து மிகவும் முக்கியமான கருத்து. இதை தமிழ் நாடு அரசு மத்திய அரசு இடம் கூறி இனி வரும் காலங்களில் பேரிடர் தடுக்கும் நடவடிக்கை காரணம் காட்டி, இந்த திட்டத்தை செயல் படுத்த முயல வேண்டும். இதனால் தமிழ் நாட்டிற்கும் பயன் உண்டு....
Rate this:
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
09-ஆக-202019:36:20 IST Report Abuse
Dr.T.Senthilsigamanimadhavan rajan - trichy,இந்தியா மற்றும் nms - Madurai,இந்தியா ஆகியோருக்கு நன்றிகள்...
Rate this:
Cancel
09-ஆக-202015:15:48 IST Report Abuse
⛷️💨💨💩💩 மிகவும் வேதனை அளிக்கிறது
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
09-ஆக-202015:09:30 IST Report Abuse
 Muruga Vel நம்ம ஆளுங்க மழை நீரை கடலுக்கு அனுப்பி விடுவது தான் வருத்தமான விஷயம் ..
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09-ஆக-202017:52:57 IST Report Abuse
madhavan rajanதமிழ்நாடும் அந்த விஷயத்தில் சளைத்ததல்ல. கர்நாடகாவிடம் போராடி தண்ணீர் பெற்று அதை தேக்கி வைக்கும் நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் கடலுக்கு அனுப்புவதில் கில்லாடிகள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X