பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தாதா விஷம் கொடுத்து கொலை? உடற்கூறு ஆய்வில் புதுத்தகவல்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அவரது கை, கால்விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.



latest tamil news



இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில், கோவையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கோவை காளப்பட்டியில் தனது காதலியுடன் வசித்து வந்த அங்கொட லொக்கா, கடந்த ஜூலை 4ம் தேதி, உயிரிழந்த நிலையில் மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்த அமானி தான்ஜி என்ற இலங்கையைச் சேர்ந்த பெண், போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய, மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை கோவை மாநகர போலீசார் கைது செய்தனர்.

வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவரது கை, கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அங்கொட லொக்காவின் உடற்பாகங்கள் தடவியல் சோதனைக்காக சென்னை அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், ரசாயன அறிக்கை வெளியான பிறகே விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா அல்லது இயற்கையான மரணமா என்பது தெரியவரும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chidam - 325,இந்தியா
09-ஆக-202018:58:28 IST Report Abuse
Chidam போலிஆவணங்களை தயாரித்து சுகமா நடமாடி வந்திருக்கான் ,
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஆக-202018:55:36 IST Report Abuse
Endrum Indian உலக மக தியாகி இவன் இவன் செத்தா என்ன நல்லது தானே ஒரு தண்டப்பயல் காலி அவ்வளவு தானே இதற்காக தடவை வேஸ்ட் பண்ணுவது சின்ஹடியாவின் சட்டத்தின் காய் வந்த கலை???அப்படித்தானே??/
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-ஆக-202017:54:18 IST Report Abuse
வெகுளி விஜய் பட வில்லன்கள் போல் இவர் நல்ல முகப்பொலிவுடன் இருக்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X