பொது செய்தி

இந்தியா

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு: 'ஜொமேட்டோ' அறிவிப்பு

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ஜொமேட்டா நிறுவனம், 'தங்களிடம் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்படும்' என, அறிவித்துள்ளது.ஆன்லைனில் உணவு 'ஆர்டர்' பெற்று 'டெலிவரி' செய்யும் 'ஜொமேட்டா' நிறுவனம், 'ஊழியர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பணிக் கலாச்சாரத்தை முழுமையாகக் கிடைக்க வேண்டும்' என்பதால் இந்த விடுப்பை அறிமுகப்படுத்துவதாக

புதுடில்லி: ஜொமேட்டா நிறுவனம், 'தங்களிடம் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்படும்' என, அறிவித்துள்ளது.
ஆன்லைனில் உணவு 'ஆர்டர்' பெற்று 'டெலிவரி' செய்யும் 'ஜொமேட்டா' நிறுவனம், 'ஊழியர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பணிக் கலாச்சாரத்தை முழுமையாகக் கிடைக்க வேண்டும்' என்பதால் இந்த விடுப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுப்பு, பெண்களுக்கு மட்டுமல்ல தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் திருநங்கைகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.latest tamil newsஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளதாவது:
நம்பிக்கை, ஏற்றுக்கொள்ளுதல், உண்மை போன்ற கலாச்சாரத்தை பணிச் சூழலில் வளர்க்க விரும்புகிறோம். அதன்படி ஜொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பெண்கள், திருநங்கைகளுக்கு இன்று முதல் ஆண்டுக்கு, 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்படும்.


latest tamil newsஎந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மாதவிடாய் கால விடுப்புக்கு பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடத்தில், குழுவிடம் தயக்கமின்றி இதற்கான விடுப்பைக் கோருங்கள். நம்முடைய பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுப்பதாகக் கூறும்போது, சங்கடமான சூழலை ஏற்படுத்தும் வகையில் ஆண் ஊழியர்கள் நடந்து கொள்ளக்கூடாது.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் எவ்வாறு வேதனையுள்ளதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜொமேட்டோ நிறுவனத்தில் உண்மையான கூட்டுக் கலாச்சாரத்தைக் கட்டமைக்க விரும்பினால், அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இரு தனியார் தொலைக்காட்சி சேனல்கள், சில பள்ளிக்கூடங்கள் தங்களிடம் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பாக, 1 முதல் 3 நாட்கள் வரை விடுப்பு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
New Indian - India,இந்தியா
09-ஆக-202020:59:32 IST Report Abuse
New Indian ஆண்களுக்கு நிகராக எல்லா பணிகளிலும் பெண்கள் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் இக்காலத்தில் இதொரு பிற்போக்கான சலுகை. பெரும்பாலான பெண்களே இதை விரும்ப மாட்டார்கள்.
Rate this:
Cancel
N T Aathav - Virudhunagar,இந்தியா
09-ஆக-202019:18:25 IST Report Abuse
N T Aathav Can we Call as "Self Care Leave" applicable for ladies.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-ஆக-202017:50:21 IST Report Abuse
வெகுளி ஆண்டுக்கு 10 நாட்கள் என்ற புதிய ஏற்பாடு அறிவுபூர்வமானதாக இல்லையே.. பகுத்துதறிவு பாதுகாவலர்கள் புதிய ஏற்பாடை எதிர்ப்பார்களா?
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
09-ஆக-202018:04:39 IST Report Abuse
Sathyanarayanan Bhimaraoஆண்டுக்கு பன்னிரண்டு நாட்களாவது விடலாமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X