சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர்.கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு, தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு
Vel_Pooja,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடுTN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு, வேல்பூஜை, கந்தசஷ்டி

சென்னை: தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர்.


கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு, தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., மற்றும் பல ஹிந்து அமைப்புகள் சார்பில், போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடியோ வெளியிட்ட, கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.


latest tamil newsதமிழகத்தில் உள்ள, கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாத யாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நேற்று மாலை, 6:01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும், வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து, பூஜை செய்ய வேண்டும் என, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்தது.


latest tamil news'கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வை, உலகிற்கு காட்டுவோம்' என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அதன்படி, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், தங்கள் வீடுகளில், நேற்று மாலை வேல் பூஜை நடத்தினர். அதேபோல், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களும், வீடுகளில் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர். பல பகுதிகளில், பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, வீடுகளின் முன் வேல் பூஜை நடத்தினர்.

திருநெல்வேலி, செண்பகம்பிள்ளை தெருவில் வேல் பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலையில் மழை பெய்தது. இருப்பினும் வீடுகள் தோறும் குடைகளை பிடித்த படி பூஜை மேற்கொண்டனர். கந்தசஷ்டி கவச பாடல்கள் ஒலிக்க, மக்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.


சமூக வலைதளங்களில் டிரெண்டிங்


வேல் பூஜை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமானோர், வேலுடன் புகைப்படம் எடுத்தும், பூஜை செய்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், டுவிட்டரில் #vel_pooja என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
10-ஆக-202012:39:07 IST Report Abuse
SIVA G  india மாற்று மத தளங்களுக்கு முன் ஈவேரா சிலைகளை வைக்கட்டும். அல்லது திக வுக்கு எதிராகவும், இந்து கோயிலுக்கு எதிரில் உள்ள ஈவேரா சிலைகளை அகற்றவும் போரட்டம் என அறிக்கை விட தைரியம், திராணி உள்ளதா என முதலில் பதில் சொல்ல வைக்க வேண்டும்.இந்த ஒரு கேள்விக்கு திமுகவிடம் பதில் கிடத்த பிறகே ,அவர்களின் கேள்விக்கோ அறிக்கைக்கோ பிஜேபி பதில் தரப்படவேண்டும்.அந்த பதிலும் ஸ்டாலின் பதிலாக இருக்க வேண்டும். மௌத் பீஸ்களின் பதிலாக இருக்ககூடாது. இவர்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் இந்த கேள்விக்கு பதில் பெறவேண்டும்.2021 தேர்தல் வரை இதே கேள்வியை அவர்களிடம் இந்துகள் எல்லோரும் கேட்டு கொண்டு இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஆக-202012:27:05 IST Report Abuse
A.George Alphonse வடக்கே ராமர் கருணை,தெற்கே கந்தன் கருணை.ஆனால் யாருடைய கருணையும் நம் மீது விழவில்லை.கொரோனவும் போகவி ல்லை.இதெல்லாம் ஓட்டுக்காக நடத்தப்படும் மத அரசியல் வழிபாடும்,வேண்டுதலும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-ஆக-202010:27:24 IST Report Abuse
konanki TMN TJ அதெப்படி ஒரே கடவுளை வழிபடும் மக்கள் ஈரான் ஈராக்கில் சிரியாவில் அதே மக்களை கொன்று குவிக்கிறார்கள்? மலேஷியா மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்பு கொண்ட இம்ரான் கானை சவூதி மிரட்டுகிறது? அவரும் பயந்து மலேஷியா விற்கு வரவில்லை? மலேஷியா வில் இருக்கும் நீங்கள் இதை எதிர்த்து கருத்து போட்டால் உங்க குடும்பமே நிர்மூலமாகி விடும். இந்தியா வில் பிரிவினை வாதம் செய்பவர்களுக்கும் அதே நிலை வரும் நேரம் சீக்கிரம் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X