பொது செய்தி

இந்தியா

ரயிலில் தவறவிட்ட பர்ஸ்: 14 ஆண்டுக்குப் பின் உரியவரிடம் ஒப்படைத்த மும்பை போலீஸ்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

மும்பை: மும்பை மின்சார ரயிலில், கடந்த 2006ம் ஆண்டு ஒரு பயணி தவறவிட்ட பர்சைக் கண்டுபிடித்த மும்பை போலீசார், 14 ஆண்டுகளுக்குப் பின், அதை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.latest tamil news
மும்பையில் பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் பதால்கர். கடந்த 2006ம் ஆண்டு மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, ஹேமந்த் பதால்கர் ரயில் நிலையத்தில் தன் பர்சைத் தவறவிட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் ஹேமந்த் புகார் அளித்தார்.

ஆனால், தனது பர்ஸ் குறித்து எந்தத் தகவலும் ஹேமந்துக்கு அப்போது மட்டுமல்ல 2020 மார்ச் மாதம்வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், தொலைபேசி மூலம் ஹேமந்திடம் பேசிய ரயில்வே போலீஸ் அதிகாரி, 'கடந்த 2006ம் ஆண்டு நீங்கள் ரயில் நிலையத்தில் தொலைத்த உங்கள் பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்து பெற்றுக்கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஹேமந்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.
கொரோனாவால் ஊரடங்கு இருந்ததால், ரயில்வே போலீசாரை ஹேமந்த்தால் சந்திக்க முடியவில்லை. மும்பையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின், வாசி பகுதியில் உள்ள ரயில்வே போலீசாரைச் சந்தித்க ஹேமந்த் சென்றார். அங்கு அவரிடம் 14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பர்ஸ், அதிலிருந்து 300 ரூபாயுடன் போலீசார் ஒப்படைத்தனர்.


latest tamil newsஇதுகுறித்து ஹேமந்த் பதால்கர் நிருபர்களிடம் கூறுகையில், '2006ல் பர்சைத் தவறவிட்டேன். பர்சில் சில கார்டுகள், ரூ.900 பணம் இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பின் ரயில்வே போலீசார் நான் தவறவிட்ட பர்சைக் கண்டுபிடித்து இப்போது திருப்பிக் கொடுத்தார்கள். நான் பர்சைத் தவறவிட்டபோது அதில் பழைய 500 ரூபாய் நோட்டு உள்பட ரூ.900 இருந்தது. 2016ம் ஆண்டு 500 ரூபாய் செல்லாது என, அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணத்தை போலீசார் என்னிடம் தரவில்லை. அதற்குப் பதிலாக ரூ.300 மட்டும் கொடுத்தனர். 100 ரூபாயை தபால் செலவுக்காக எடுத்துக்கொண்டனர். செல்லாமல் போன 500 ரூபாயை மாற்றிக் கொடுக்கிறோம். அதையும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளனர். 14 ஆண்டுகளுக்குப் பின் என்னுடைய பணமும், பர்சும் கிடைத்தது மகிழ்ச்சியாகவுள்ளது' எனறார்.


latest tamil newsரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஹேமந்த் பர்ஸ் தொலைந்த சில நாட்களில் அவரிடம் பிக் பாக்கெட் அடித்தவரைக் கைது செய்து பர்சைக் கைப்பற்றிவிட்டோம்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஆக-202010:36:51 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan very good quick response ..india vilankirum ..ரயில்வே police team worked good job in மும்பை ..வேஸ்ட் department ..tax money waste for railway police ..
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஆக-202009:23:32 IST Report Abuse
Sampath Kumar நல்ல போலீஸ் தொலைத்த நல்லவரு அதை மறந்தே பொய் இருப்பாரு உள்ள onum illattium paravai illai vanthathae என்று சந்தோசம் தான்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஆக-202001:40:39 IST Report Abuse
தல புராணம் பர்ஸ் காலியாத் தான் கிடைச்சிருக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X