விஜயவாடா தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் ; ஆந்திர அரசு அறிவிப்பு

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவின் விஜயவாடாவில் நடந்த ஹோட்டல் தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.latest tamil newsஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற ஹோட்டல் ஒன்று கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த ஹோட்டலில் மின் கசிவால் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இங்கு கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 40 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கான ரசாயன பொருட்களும் இருந்தால் தீ மளமளவென வேகமாக பரவியது. இதனால் ஏற்பட்ட புகை காரணமாக பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news


தொடர்ந்து, தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. விஜயவாடாவில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஜெகன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவித்தார்.


latest tamil newsமேலும் விபத்து குறித்து விஜயவாடா போலீஸ் கமிஷனர் சீனிவாசுலு கூறுகையில், அதிகாலை 5.09 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு தீ விபத்து தொடர்பாக அழைப்பு வந்தது. அதனையொட்டி, போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க போராடினர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கடமாக உள்ளது. விசாரணைக்கு பின்னரே, விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
10-ஆக-202000:08:22 IST Report Abuse
NicoleThomson வேதனையான நிகழ்வு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X