பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020
Share
Advertisement
Health ministry, Record, 7 lakh, Covid19 tests, conducted,recovery rate, rises

புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 68.78 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை தெரிவித்ததாவது: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 53,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 68.78 ஆக உள்ளது. இறப்பு விகிதமும் 2.01 சதவீதமாக குறைந்துள்ளது.


latest tamil news



நாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 500 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தினமும் சராசரியாக 5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக 6 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்ட்டு வந்தன. இந் நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும், குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் இடையே தற்போது மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X