டில்லியில் அடுத்த 4 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020
Share
Advertisement

புதுடில்லி : பருவமழை காரணமாக டில்லியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பருவமழை அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் அதிகரித்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கி வெள்ளக்காடாகின. பல மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லி மற்றும் மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மையம் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக தேசிய தலைநகர் டில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக டில்லியில் வசிக்கும் மக்களுக்கு இன்று பெய்த மழையால் சிறிது நிவாரணம் கிடைத்தது. ஐ.ஜி.ஐ விமான நிலையம், சஃப்தர்ஜங், துவாரகா மற்றும் பகதூர்கர் அருகே உள்ள பகுதிகள் உட்பட தெற்கு மற்றும் தென்மேற்கு டில்லியில் பல இடங்களில் இருந்து மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, டில்லியில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மஹாராஷ்டிராவில் நாளை மீண்டும் தென் மேற்கு பருவமழைக்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.


latest tamil news



மேலும் ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது : அரபிக்கடலில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வங்க கடலில் காற்று வீசுவது ஹரியானா, டெல்லி-என்.சி.ஆர் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தை குறைந்த மட்டத்தில் அடையும். அதே நேரத்தில் மத்திய பிரதேசம் மற்றும் உ.பி.யை ஒட்டியுள்ள ஒரு சூறாவளி சுழற்சி உருவாகும். இது தற்போது வடக்கு நோக்கி நகர துவங்கியது. வட இந்தியாவை பொறுத்தவரை, இமாச்சல பிரதேசத்திற்கும் ஹரியானா மற்றும் பஞ்சாப்பிற்கும் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X