பொது செய்தி

இந்தியா

'இந்திய பொருட்களை வாங்க விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்': பியூஷ் கோயல்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவிலேயே தயாரான பொருட்களையே வாங்க வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று வர்த்தர்களை மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.



latest tamil news



தேசிய வர்த்தக தினத்தை முன்னிட்டு நடந்த டிஜிட்டல் உரையில் இந்த கோரிக்கையை விடுத்தார்.' பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து தரமற்ற பொருட்களை வாங்கி மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை அடையாளம் காட்ட வேண்டும்.

சுயசார்பு திட்டத்தின் கீழ் தரமான உள்நாட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். உள்நாட்டு பொருட்கள் விற்பனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன் மக்கள் தரமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும்.


latest tamil news



உள்நாட்டு தயாரிப்பால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும். ரூ 10 லட்சம் கோடி மதிப்புள்ள வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள், உள்நாட்டிலேயே தயார் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202007:23:25 IST Report Abuse
தமிழ் இந்திய பொருட்களை மட்டுமே வாங்க மக்கள் தயார் ஆனால் சீனபொருட்கள் அனைத்திற்கும் தடை என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா.
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
10-ஆக-202007:06:23 IST Report Abuse
natesa first politicians need to follow.
Rate this:
Cancel
10-ஆக-202006:00:26 IST Report Abuse
பார்ப்பனன் ஆனா நீ மட்டும் வெளிநாட்டு ரபேல் வாங்குவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X