சிங்கப்பூரில் ஆரம்ப கட்ட கொரோனா சோதனை தொடக்கம்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020
Share
Advertisement

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசிக்கான ஆரம்ப கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளை தடுப்பதற்காக இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகளை கண்டறியும் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தொற்றுக்கான தடுப்பூசி மனித சோதனையில் உள்ளன. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிக்கான ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனை சிங்கப்பூரிலும் தொடங்கப்பட்டு உள்ளது.

முதல் தடுப்பூசிகள் அடுத்த வாரம் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாட்டின் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று 55,000 ஐ கடந்தது. லூனார்-கோவ் 19 என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை Duke-NUS Medical School மற்றும் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான ஆர்க்டரஸ் தெரபியூட்டிக்ஸ் ( Arcturus Therapeutics ) தயாரித்துள்ளது. அக்., வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த மருத்துவ சோதனைக்கு பொறுத்தமானவர்களாக உறுதி செய்யப்படும் தன்னார்வலர்களை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



சிங்ஹெல்த் புலனாய்வு மருத்துவ பிரிவு இந்த தடுப்பூசிக்கான பரிசோதனையை நிர்வகிக்கிறது. தற்போது 250 க்கும் மேற்பட்ட தனனார்வலர்கள் இந்த பரிசோதனைக்கு முன்வந்துள்ளனர். முதல்கட்டமாக 100 தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தன்னார்வலர்களில் 20 முதல் 50 வயதுடையவர்கள் உள்ளனர். 21 முதல் 80 வயது வரையிலானதன்னார்வலர்களுக்கு இந்த சோதனை திறந்திருப்பதால், அதிகமான பங்கேற்பாளர்களை, குறிப்பாக வயதானவர்களைத் தேடுவதில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். இதற்கிடையில் சிங்கப்பூரில் புதிதாக 175 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 55,104 ஆக உயர்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X