ரஷ்யாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 78 சதவீதமாக உள்ளது

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020
Share
Advertisement

மாஸ்கோ: ரஷ்யாவில் இதுவரை 6.93 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 78 சதவிகிதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,189 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. இதையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8,87,536 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒரே நாளில் மேலும் 77 பேர் உயரிழந்ததையடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,931 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் 84 மாகாணங்களில் 1,382 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் விகிதம் 0.6 சதவீதமாக உள்ளது. கடந்த மே மாத ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில் அந்நாட்டின் கமேலியா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து வரும் ஆக., 12ம் தேதி பதிவு செய்யப்பட உள்ளது. பதிவுக்கு பின் 1,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X