சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

தமிழகம் முழுதும் நடந்தது வேல் பூஜை கந்த சஷ்டி கவசம் பாடி மக்கள் பரவசம்

Added : ஆக 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை; தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர். கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு, தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு

சென்னை; தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர்.

கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு, தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., மற்றும் பல ஹிந்து அமைப்புகள் சார்பில், போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடியோ வெளியிட்ட, கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள, கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாத யாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நேற்று மாலை, 6:01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும், வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து, பூஜை செய்ய வேண்டும் என, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்தது.'கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வை, உலகிற்கு காட்டுவோம்' என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், தங்கள் வீடுகளில், நேற்று மாலை வேல் பூஜை நடத்தினர். அதேபோல், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களும், வீடுகளில் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர்.பல பகுதிகளில், பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, வீடுகளின் முன் வேல் பூஜை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
10-ஆக-202012:45:13 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy தெய்வம் நின்று கொல்லும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X