சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

வீடு, கோவிலில் கந்தசஷ்டி பாராயணம்

Added : ஆக 09, 2020
Share
Advertisement
 வீடு, கோவிலில் கந்தசஷ்டி பாராயணம்

திருப்பூர்: திருப்பூரில், ஆயிரக்கணக்கான இந்து முன்ன ணியினர் வீடுகளில், வேல் பூஜை நடந்தது.கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை கண்டித்தும், இந்து மக்களின் ஒற்றுமை, ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், நேற்று, வேல் வழிபாடு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அந்த வகையில், நேற்று மாலை, 6:00 மணியளவில் இந்து முன்னணி மாநில தலைவர், மாநில செயலாளர்கள் மற்றும் நிர்வாகி கள், தொண்டர்கள் உட்பட பா.ஜ., கட்சியினர், பொதுமக்கள் என, பலரும் வீடுகளில் முருகன் படம் வைத்து, வேல் பூஜை நடத்தினர். தொடர்ந்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.திருப்பூரில், கருவம்பாளையம், ஆலங்காடு, வெடத்தலாங்காடு, பூச்சக்காடு உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் தங்கள் வீடுகளில் வேல் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, வீட்டுவாசலில் குடும்பத்தினரோடு இணைந்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். முன்னதாக, பூச்சக்காடு சுப்ரமணியர் கோவிலில், வேல் வழிபாடு நடந்தது.மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.பூச்சக்காடு பகுதி வீடுகளில் நடந்த வேல் பூஜையை, காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கி வைத்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X