சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கருப்பர் கூட்டத்தை கண்டித்து கந்த சஷ்டி பாராயணம்

Added : ஆக 10, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கருப்பர் கூட்டத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் வீடுகள், கோவில்கள் மற்றும் பொது இடங்களில் கந்தசஷ்டி பாராயணம் நடந்தது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் வேல் கோலமிட்டு, விளக்கேற்றி கந்த சஷ்டி பாராயணம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.இதனையடுத்து புதுச்சேரியில் பா.ஜ.,வினர் நேற்று மாலை அனைத்து வீடுகளிலும் கந்த சஷ்டி கவசத்தை போற்றும் வகையில் வேல் கோலமிட்டு அகல் விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். பெத்து செட்டிப்பேட்டை லாஸ்பேட்டை சக்திவேல் கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கந்த சஷ்டி கவசம் பாடி கந்தனை வணங்கி அகல் விளக்கு ஏற்றினர்.

நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஊர் தலைவர்கள் மணி, கலியபெருமாள், வெற்றிவேல், முருகவேல் முன்னிலை வகித்தனர். லாஸ்பேட்டை சட்டசபை தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாநில செயலர்கள் ஜெயந்தி, லதா, மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள்,கோவில்கள்,பொது இடங்களில் கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. அதில் ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் பங்கேற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X