சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

வீடுகளில் வேல் வரைந்த பக்தர்கள்

Added : ஆக 10, 2020
Share
Advertisement
சிவகங்கை:சிவகங்கையில் முருகனின் பெருமையை நிலைநாட்டும் வகையில் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாடினர்.பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் பக்தர்கள் அவர்களது வீடுகளில் முருகன் படத்தை வைத்துவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாட வேண்டுகோள் விடுத்திருந்தனர். சிவகங்கை மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில்நகர் தலைவர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் மக்களிடையை விழிப்புணர்வு
 வீடுகளில் வேல் வரைந்த பக்தர்கள்

சிவகங்கை:சிவகங்கையில் முருகனின் பெருமையை நிலைநாட்டும் வகையில் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாடினர்.

பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் பக்தர்கள் அவர்களது வீடுகளில் முருகன் படத்தை வைத்துவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாட வேண்டுகோள் விடுத்திருந்தனர். சிவகங்கை மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில்நகர் தலைவர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் மக்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகளிலும், கோயில்களிலும் முருகன் படம் வைத்து விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாடினர்.

* திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் பக்தர்கள் பலரும் வீடுகளில் ''வேல்'' வரைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.*திருப்புத்துாரில் திருமுருகன் திருப்பேரவை குழு சார்பில் உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடந்தது. வெள்ளி வேலுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பேரவை நிர்வாகிகள் கைலாசம், கலைமணி, மாணிக்கம், மாரிமுத்து, மணிமாறன். கார்த்திகேயன் உள்ளிட்டோர் கந்த சஷ்டி கவச பாராயணத்தை பாடி முருகனை வழிபட்டனர்.

*திருப்புத்துார் கல்லாகுழித் தெருவில் வீடுகளின் முன்பாக வேல் வரைந்து அகல் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பு மாவட்ட தலைவர் நாகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் சேது.சிவராமன், ஒன்றிய பா.ஜ.,தலைவர் முத்து பாண்டி மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் சக்தி முத்தாலம்மன்கோயிலில், கொரோனாவிலிருந்து மீளவும், கருப்பர் கூட்டத்தை கண்டித்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கந்த சஷ்டி பாராயணம் மற்றும் வேல்பூஜை நடந்தது. அழகப்பன் வரவேற்றார். மாநிலசெயலாளர் சத்தியமூர்த்தி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X