வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்

Added : ஆக 10, 2020
Share
ராமநாதபுரம்:கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் வேல் வரைந்து பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் பாடினர்.கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய செயல் ஹிந்துக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வீடுகளில் வேல் வரைந்து பூஜை செய்து கந்த சஷ்டி பாடுமாறு பா.ஜ.,

ராமநாதபுரம்:கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் வேல் வரைந்து பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் பாடினர்.

கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய செயல் ஹிந்துக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வீடுகளில் வேல் வரைந்து பூஜை செய்து கந்த சஷ்டி பாடுமாறு பா.ஜ., சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் வீடுகளில் மக்கள் வேல் வரைந்தும், முருக கடவுள்போட்டோ வைத்தும் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.ராமநாதபுரத்தில் பா.ஜ.,ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளிலும்,கமுதி, பெருநாழி, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நிர்வாகிகள் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.

* ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் பல வீடுகளிலும், பொது இடங்களிலும் வேல் பூஜை நடத்தப்பட்டது.வேல், முருகனின் படம் வைத்து கந்தசஷ்டி கவசம் பாடினர்.கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ., மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் பரமேஸ்வரன் பங்கேற்றார்.

கீழக்கரை:கீழக்கரை 21வதுவார்டு தட்டான் தோப்புத்தெருவில் சஷ்டி திதியைமுன்னிட்டு வேல் பூஜை நடந்தது. சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.4 அடி உயரமுள்ள வேலுக்கு அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது.முருகப்பெருமானுக்கு 'அரோகரா கோஷங்கள்' முழங்கப்பட்டன. கந்த சஷ்டி கவசம், சண்முககவசம் உள்ளிட்ட முருகனின் பக்திப்பாடல்கள், பாராயணம் பாடினர்.

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத் தில் பா.ஜ., ஹிந்து அமைப்பினர் விடுத்த அழைப்புஏற்று நேற்று ராமேஸ்வரத்தில் பல தெருக்களில் வீட்டு சுவரில் மக்கள் வேல் வரைந்து, குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்து, கந்த சஷ்டி கவச பாடலை பாடி னர். பா.ஜ., மாவட்ட தலைவர் முரளீதரன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி, பா.ஜ., நிர்வாகிகள் ராமநாதன், மோகன், சுந்தரமுருகன், ராஜா பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X