சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (312)
Share
Advertisement
DMK, Kanimozhi, CISF, இந்தியரா, கனிமொழி, திமுக, மகளிரணி செயலர், அதிகாரி, நடவடிக்கை

சென்னை : சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,யிடம், 'நீங்கள் இந்தியரா' என கேட்ட, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான லோக்சபா நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணி விமானத்தில், கனிமொழி டில்லி சென்றார். அப்போது, விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், ஹிந்தியில் பேசினார்.

அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார்.


latest tamil news


இதுகுறித்து, கனிமொழி, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரியிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால் தான், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு அவர், 'நீங்கள் இந்தியரா' என, என்னை பார்த்து கேட்கிறார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை, எப்போது உருவானது என்பதை, நான் அறிய விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கனிமொழியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., தரப்பில், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியான பதிவில், 'விரும்பத்தகாத இந்த சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எந்த அதிகாரியிடமும், ஹிந்தியில் தான் பேச வேண்டும் என, எந்த உத்தரவும், எங்கள் தரப்பில் பிறப்பிக்கப்படவில்லை' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (312)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
16-ஆக-202015:35:51 IST Report Abuse
madhavan rajan இவ்வளவு பேசும் இந்தம்மா இன்னும் அந்த காவலரின் பெயரை சொல்லவில்லை. அதேபோல என்று நடந்தது எந்த ஏர்போர்ட்டில் என்பதையும் குறிப்பிடவில்லை. திருப்பதியில் ஒரு மொட்டைத்தலையன் என்னை திட்டிவிட்டான் என்பது போல உள்ளது இவருடைய குற்றச்சாட்டு. இவரெல்லாம் ஒரு எம் பி. வெட்கக்கேடு.
Rate this:
Cancel
kalyan - Tiruchirapalli,இந்தியா
14-ஆக-202008:31:11 IST Report Abuse
kalyan பல முறை தமிழ் நாடு விமான நிலையங்களை பயன் படுத்தும் பொதும் எனக்கு இத்தகைய அனுபவம் நடந்துள்ளது ஒரு முறை திருச்சியில் ஹிந்தியில் பேசாத காரணத்தால் என் மனைவியை வரவேற்க உள்ளே போக டிக்கெட் வாங்கியும் மத்திய போலீஸ் அனுமதிக்கவில்லை கட்டணத்தை திருப்பிக்கேட்ட போது ஒரு முறை கொடுத்த கட்டணம் திரும்பத்தர மாட்டாது என்று சொல்லி விட்டனர் அதே நேரத்தில் டிக்கெட் வாங்காமலேயே என் தமக்கை ஹிந்தியில் மட்டும் பேசி உள்ளே சென்று என் மனைவியை அழைத்து வந்துவிட்டார் இதை அவளுடைய திறமை என்று என் மனைவி கூறிய போது தான் இன்னமும் வலித்தது சிங்கப்பூரின் விமானி தமிழில் பேசும்போது நம் அதிகாரிகள் ஏன் ஆங்கிலத்தில் பேச மாட்டேன் என்கிறார்கள்? சிங்கப்பூரின் மக்களிடம் அரசாங்க அதிகாரிகளிடம் மொழி வெறி இல்லை நம் வட மாநில அதிகாரிகளிடம் அது மட்டும் மிகவும் உள்ளது
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13-ஆக-202019:07:24 IST Report Abuse
sankaranarayanan முன்பு தேவிலால் மேரினாவில் கூட்டம் போட்டபோது தமிழில் மொழி பெயர்த்தது யாரோ? டெல்லியில் அவர் பங்களாவில் வேலைசெய்ப்பவர்களிடம் தமிழில்தான் பேசுவார்போல இருக்கு. உப்பு சப்பு இல்லாத ஒரு பதற்றமான செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X