சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

மாவட்டத்தில் வீடுகள் தோறும் வேல் பூஜை

Added : ஆக 10, 2020
Share
Advertisement
 மாவட்டத்தில் வீடுகள் தோறும் வேல் பூஜை

விருதுநகர்:கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து சஷ்டி விரதமான நேற்று மாவட்டத்தில் 300க்கு மேற்பட்ட இடங்களில் வீடுகள், கோயில்கள் தோறும் வேல் பூஜை நடத்தப்பட்டு கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டடது.

விருதுநகர் முத்துராமன்பட்டி கொப்பன் தெருவில் முருகன் உருவ படத்திற்கு வேல் பூஜை செய்து பொதுமக்கள், பா.ஜ.,வினர் கந்த சஷ்டி கவசம் பாடல்களை பாடினர். மாவட்ட துணை தலைவர் சங்கரேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கஜேந்திரன், மாநில ராணுவ பிரிவு துணை தலைவர் ஈஸ்வரன் பங்கேற்றனர்.

நகர் பகுதிகளில் நகர நிர்வாகிகள் புஷ்பகுமார், அழகுராஜன், பிரபாகரன், பெரிய பெருமாள், கணேஷ்குமார் தலைமையில் கட்டையாபுரம், பெரிய காளியம்மன் கோயில் தெரு, கசாப்பு கடை தெரு, வாடியன் தெரு, பர்மாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

சிவகாசி: வீட்டு வாசல்களில் வேல் கோலமிட்டு விளக்கேற்றி வழிப்பட்டனர். புதுக்கோட்டையில் பா.ஜ., மகளிர் அணி மாவட்ட தலைவர் காளீஸ்வரி தலைமையில் வீடுகள், டூவீலர்களில் வேல், வெற்றிவேல் வீரவேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

ராஜபாளையம்: பச்சமட, காமாட்சி அம்மன் கோயில் ,எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் முருகன் படத்திற்கு விளக்கேற்றி கந்த கவசம் பாடப்பட்டது.நகர் மற்றும் கிராமப்பகுதி பஜனை குழுவினர் பல்வேறு கோயில்களில் கந்த கவசம் பாடினர்.

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் சன்னிதியில் சடகோப ராமானுஜ ஜீயர் தலைமையில் கந்தசஷ்டி கவசம் பாராயண வழிபாடு நடந்தது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர்சரவணகார்த்தி, பக்தர்கள் பங்கேற்றனர்.

* பா.ஜ.,சார்பில் ஆராய்ச்சிபட்டி தெரு சவுண்டியம்மன் கோயில் வளாகம் முருகன் சன்னிதியில் மாநில செயற்குழு உறுப்பினர் சோலையப்பன் தலைமையில் கந்தசஷ்டி கவசம் பாராயண வழிபாடு நடந்தது. மாவட்ட செயலர்கள் சரவணதுரை, முருகன், ஊடகபிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து, நகர செயலர் இளங்கோசெல்வன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X