சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

தேனியில் வீடுகள்தோறும் ஒலித்த கந்தசஷ்டி கவசம்

Added : ஆக 10, 2020
Share
Advertisement
 தேனியில் வீடுகள்தோறும் ஒலித்த கந்தசஷ்டி கவசம்

தேனி:கந்தசஷ்டி கவசத்தை அவதுாறு செய்த கருப்பர் கூட்டத்தை கண்டித்தும், சஷ்டியையொட்டி தேனியில் பா.ஜ., இளைஞரணி பொதுச் செயலாளர் தேவக்குமார், நகரத் தலைவர் விஜயகுமார் ஏற்பாட்டில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் பாடினர்.

எடமால் தெருவில் வேல் பூஜை செய்து பொங்கல் வைக்கப்பட்டது. போடியில் மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமையில் பூஜை நடந்தது. ஹிந்துக்கள் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் பூஜை நடத்தப்பட்டது.

* மாவட்ட ஹிந்து முன்னணி , ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடி வேல்பூஜை நடந்தது.ஆண்டிபட்டி:

ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வீட்டின் முன் வேல் பூஜை செய்து கந்தசஷ்டிகவசம் பாடி முருகனை வழிபட்டனர்.

மாலை வீட்டு வாசலில் வேல் படம் வைத்து கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. ஏற்பாடுகளை நகரத்தலைவர் லோகேந்திரராஜன், மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், துணைத்தலைவர் பிரபாகரன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X