பீதியில் அமைச்சர்கள்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு கொரோனா தொற்று உறுதியானதும், மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். இதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டதால், பல அமைச்சர்கள் பீதிக்குள்ளாயினர்.latest tamil news
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் பரிசோதனை செய்து கொண்டனர். பலருக்கு, தொற்று இல்லை என்பதற்கான, 'நெகடிவ்' என, முடிவுகள் வந்தது. ஆனால் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தொற்று உறுதியானது.
அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும், நெகடிவ் ரிசல்ட் வந்தது. ஆனால், அவர் வீட்டிற்கு சில கட்சி தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவருக்கு தொற்று இருந்தது உறுதியானதால், மீண்டும் பரிசோதனை செய்து கொண்டார் நிர்மலா. அதிலும் நெகடிவ் என தெரிய வர, நிம்மதிப் பெருமூச்சு விட்டாராம், அமைச்சர்.


latest tamil newsபல அமைச்சர்கள் கொரோனா பயத்தால் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. வீட்டிலிருந்தே அனைத்து வேலைகளையும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவே செய்து வருகின்றனர்.பிரதமரை பொறுத்த வரை, அவருக்கென, தனியாக டாக்டர்கள் குழுவே இயங்கி வருகிறது. தினமும் பிரதமருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், தினமும் பரிசோதித்து வருகிறது, டாக்டர்கள் குழு.பிரதமரின் பாதுகாப்பை கவனிப்பது, எஸ்.பி.ஜி., என்கிற சிறப்பு பாதுகாப்புக் குழு கமாண்டோ வீரர்கள். எந்தவித தாக்குதலில் இருந்தும் பிரதமரை பாதுகாப்பது இந்த குழுவின், பொறுப்பு.

பிரதமரின் பொதுக் கூட்டங்களில், சபாரி உடையில், இவர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம்.இப்போது கொரோனாவிலிருந்து பிரதமரை பாதுகாப்பதும், இந்த அதிரடிப் படையின் வேலையாகிவிட்டது. யாரையும், பிரதமரை நெருங்கவிடுவதில்லை, இந்த குழுவினர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202016:00:28 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) பயமே முதல் எதிரி , தேவையான முன்னெச்சரிக்கை உடன் இருந்தால் எந்த வைரஸும் நம்மை அணுகாது.
Rate this:
Cancel
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-202009:10:53 IST Report Abuse
Sivramkrishnan Gk செய்தியில் ரூபாய் இருபத்தைந்து லக்ஷம் நன்கொடை என்று படித்தேன். எடு
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-ஆக-202019:46:51 IST Report Abuse
Malick Raja காலத்தின் கோலங்கள் .. மரணத்திற்கு பயந்து ஓட்டம் பிடித்தால் மரணம் வராதா .. பிறப்பு என்பது இறப்பில் வந்தது .. ஆக இப்படி பயந்திருப்பவர்களுக்கு கொரோனா இருக்கும் ஆனால் வெளியில் தெரியாமல் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X