பொது செய்தி

இந்தியா

தமிழருக்கு மரியாதை

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

ரபேல் போர் விமானங்களை வாங்க, இந்திய அரசுக்கு பெரிதும் உதவியவர், முன்னாள் விமானப் படைத் தலைவர், ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமி. தமிழகத்தைச் சேர்ந்த இவர், விமானப் படையில் பணியாற்றிய போது, பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியிருக்கிறார்.



latest tamil news



'இது இந்தியாவிற்கு மிகவும் அவசியமான போர் விமானம்; இந்த விமானங்கள், இந்திய விமானப் படைக்கு வர வேண்டும்' என, ஆசைப்பட்டவர், அவர்.ரபேல் விமானங்களை வாங்க, இந்தியா முயற்சி எடுத்த போது, முழு மூச்சாக ஆதரவு அளித்தவர் கிருஷ்ணசாமி.
இந்த விவகாரத்தில், மோடியை கடுமையாக விமர்சித்து, 2019 லோக்சபா தேர்தலில் பிரசாரமாகவே மாற்றினார், ராகுல். அப்போதும், 'ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படைக்கு தேவை' என உறுதியாக சொன்னவர், கிருஷ்ணசாமி.இந்தியா வந்துள்ள, ஐந்து ரபேல் விமானங்கள், விரைவில் விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.


latest tamil news



இதை ஒரு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார், மோடி. இந்த விழாவில், ரபேல் விமானங்களை வாங்க முழு ஆதரவு அளித்த, ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமியை அழைத்து மரியாதை செய்யவும், பிரதமர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, 'நீங்கள் அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும்' என, கிருஷ்ணசாமியை போனில் கேட்டுக் கொண்டாராம் மோடி. இம்மாத இறுதியில், இந்த விழா,ஹரியானாவின் அம்பாலா நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
10-ஆக-202020:52:02 IST Report Abuse
Gnanam நல்ல செய்தி.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
10-ஆக-202013:56:07 IST Report Abuse
Murthy விமானம் வாங்கக்கூடாது என்று ராகுல் கூறினாரா? ஊழல் என்றுதானே கூறினார்....
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-ஆக-202012:59:06 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்திய முப்படைகளில் அதிகாரியாக தமிழகத்தை மட்டும் சேர்ந்தவர்கள் மிக சொற்பமே. ஆனால் பெங்களூரு ஆந்திராவில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்கள் ராணுவத்தில் அதிகம் உள்ளனர். இதற்கு காரணம் ஹிந்தி மட்டுமே. தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். இதற்கு பன்மொழி தெரியாததே காரணம்.
Rate this:
G.Krishnan - chennai,இந்தியா
11-ஆக-202014:10:50 IST Report Abuse
G.Krishnanதமிழர்கள் யாருக்கும் இந்தி தெரிந்துவிடக்கூடாது என்று அவர்கள் நினைத்ததை இதுவரையில் சாதித்து காட்டியுள்ளார்கள் . . . . ஆனால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் இந்தி படிப்பார்கள், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லி கொடுப்பார்கள் அதன் மூலம் அவர்கள் குடும்பம் மட்டுமே பயனடைவார்கள், வேறு எந்த குடும்பத்தினரும் இந்தி படிக்கவிடாமல் செய்து தமிழர்களை முட்டாளாக்குவார்கள் . . . . . .அதன் காரணமாகவே ராணுவம் போன்றவற்றில் தமிழர்களால் முன்னுக்கு வரமுடியவில்லை. . . .தமிழன் என்று முழித்து கொள்வான் என்று தெரியவில்லை. . . . . .இந்த மாதிரியான தமிழனுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் கும்பலிடமிருந்து எப்பொழுது தான் விடுதலை கிடைக்குமோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X