புத்தர் பற்றிய ஜெய்சங்கரின் பேச்சு; ‛உல்டாவாக' வெளியிட்ட நேபாள ஊடகங்கள்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Buddha, India, Nepal, Jaishankar, புத்தர், பிறந்தஇடம், சர்ச்சை, ஜெய்சங்கர், நேபாளம், ஊடகங்கள், இந்தியா, மறுப்பு, ஸ்ரீவஸ்தவா

புதுடில்லி: புத்தரின் வரலாற்று பாரம்பரியம் குறித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேச்சை, புத்தர் இந்தியாவை சேர்ந்தவர் என பேசியதாக நேபாள ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன.

காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ‛புத்தர் மற்றும் காந்தியின் போதனைகள் ஒன்றாக அமைந்துள்ளதையும், பவுத்த பாரம்பரியத்தை இந்தியாவும் நேபாளமும் எப்படி பகிர்ந்து வருகின்றன,' என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அவரது பேச்சைக் குறிப்பிட்ட நேபாள ஊடகங்கள், ‛புத்தர் இந்தியாவை சேர்ந்தவர் என்று ஜெய்சங்கர் பேசினார்,' என செய்தி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டன.


latest tamil news


மேலும், இந்த செய்தியை குறிப்பிட்ட நேபாள வெளியுறவுத்துறை செய்தித்தொடா்பாளர், 'புத்தரின் பிறப்பிடம் நேபாளத்தின் லும்பினியில் உள்ளது. இதை உலக வரலாற்று சின்னங்களில் ஒன்றாக 'யுனெஸ்கோ' அங்கீகரித்துள்ளது. 2014ம் ஆண்டு நேபாள நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி இதை அங்கீகரித்து பேசியுள்ளார்,' எனக்கூறினார்.

அதேபோல், நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதமரான மாதவ்குமார், நேபாள காங்., செய்தித் தொடர்பாளர் பிஸ்வாஸ் பிரகாஷ் ஆகியோர் ஜெய்சங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news


நேபாள ஊடகங்களின் செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா அளித்துள்ள விளக்கம்: 'புத்தர் இந்தியாவைச் சோ்ந்தவர்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாக நேபாள ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது. அமைச்சர் ஜெய்சங்கர், புத்தரின் வரலாற்று பாரம்பரியத்தைதான் பேசினார். புத்தர் பிறந்த இடம், இப்போது நேபாளத்தில் உள்ள லும்பினிதான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. இது தொடா்பான சா்ச்சைகள் தேவையற்றவை' இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
10-ஆக-202016:31:55 IST Report Abuse
NicoleThomson இது போன்று மாற்றி செய்வது ஸ்டைல் ஆச்சே
Rate this:
Cancel
S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
10-ஆக-202016:30:29 IST Report Abuse
S.VELMURUGAN " இந்தியா இரு பெரும் மகான்களான மகாத்மா காந்தி, புத்தர் என்பவர்களைக் கொடுத்துள்ளது" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியிருந்தால், அது நிச்சயமாக சரியே. நேபாளத்தில் லும்பினியில் பிறந்தது சாமானிய மனிதனான சித்தார்த்தர். அவர் தந்தை சுத்தோதனார்,சித்தார்த்தர் அரசு வழியை விட்டு சென்று விடக்கூடாதென்று கேளிக்கையை ஏற்படுத்தினார். யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்து இரகுலன் என்ற மகன் பிறந்தான். லும்பினியில் நரக வேதனை அடைந்த சித்தார்த்தர் நேபாளத்தை விட்டு வெளியேறி இந்தியாவை நோக்கி வரும்போதே அவர் மனம் சற்று ஆறுதடைந்தார். இறுதியில் பீகாரில் புத்தகயாவில் சுஜாதா என்ற பெண்மணியிட்ட அன்னத்தைப் புசித்து அங்கேயே போதிமரத்தடியில் தொடர்ந்து ஆறு நாட்கள் யோக நித்திரை யின் மூலம் மறு பிறவியான ஞானியானார். நேபாள சித்தார்த்தர் இந்தியாவின் புத்தரானார். இதைத்தான் எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். நேபாள ஞானசூனியங்களுக்கு இது எப்படி புரியும்? முதலில் நேபாள நாட்டை சர்வாதிகார சீனாவின் பிடியிலிருந்து காப்பாற்றுங்கள்.அதன்பின் புத்தரை கவனியுங்கள்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
10-ஆக-202012:24:31 IST Report Abuse
Sivagiri அப்படி அல்ல. . . இந்தியாவில் உள்ள நேபாள் என்ற மாநிலத்தில் உள்ள லும்பினி - என்று படிக்க வேண்டும் . . . ( இன்னும் சில நாட்களில் . . ) . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X