சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

சாலைகளில் வேல் படத்தை வரைந்த பக்தர்கள்

Added : ஆக 10, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், முருகப்பெருமானின் வேல் படத்தை வரைத்து, பக்தர்கள் கந்தசஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் அமைப்பினர் இழிவுபடுத்தியதை கண்டித்தும், கோடிக்கணக்கான பக்தர்களின், வேண்டுகோளை ஏற்றும், ஆக.,9ம் தேதி வீடுகளில் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரோட்டில் நேற்று, எஸ்.கே.சி., சாலை, ராஜாக்காடு சாலை, பெரியார் நகர் சாலை, கலைமகள் பள்ளி சாலை பகுதிகளில், முருகப்பெருமானின் வேல் படத்தை வரைந்தனர். பெரும்பாலும் முருக பக்தர்களே இதில் ஈடுபட்டனர். ராஜாக்காடு பகுதியில், 10க்கும் மேற்பட்ட வீடுகளின் முன், சாலையில் வேல் கோலமிடப்பட்டது. இதையறிந்த ஈரோடு டவுன் போலீசார் சென்றனர். முன் அனுமதியின்றி, சாலைகளில் வேல் உள்ளிட்ட கோலங்களை வரையக்கூடாது. வேல் கோலத்தை, மக்கள் மிதிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்யலாமா? என போலீசார் கேள்வி எழுப்பியதால், கோலம் போட்டவர்கள், தண்ணீரை ஊற்றி அழித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X