பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
class 10, class 10 exam, tamil nadu, tamil nadu exam, SSLC result, பத்தாம்வகுப்பு, தேர்வு, முடிவுகள், தேர்ச்சி,

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கொரோனாவால் தேர்வு ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண் விபரம், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியானது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.



latest tamil news


மொத்த பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை: 9,38,829
மாணவியர் - 4,68,070
மாணவர்கள்- 471759
தேர்ச்சி பெற்றவர்கள்- 100 சதவீதம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத 12,690 பள்ளிகள் பதிவு செய்தன. இதில் 7,368 மேல்நிலை பள்ளிகள். 5,322 உயர் நிலை பள்ளிகள். 6,235 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 17 முதல், 21 வரை, பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஆக-202016:33:38 IST Report Abuse
Bhaskaran அப்படியே எல்லாருக்கும் அரசு வேலையும் கொடுத்துட்டா ரொம்ப புண்ணியமாக போகும் எசமான்
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
10-ஆக-202015:59:35 IST Report Abuse
s vinayak கொஞ்சம் காலம் தாழ்த்தி யாவது தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் திராவிட கட்சிகளின் தேர்தல் நேரங்களில் போட்டி போட்டுக்கொண்டு 8லிருந்த விலக்கு, 10 விருந்து விலக்கு, 12லிருந்து விலக்கு, படிப்பிலிருந்தே மாணவர்களுக்கு விலக்கு, குழந்தை பிறந்தவுடனேயே பிறப்பு சான்றிதழோடு படித்து முடித்ததற்கான சான்றிதழும் இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
10-ஆக-202015:42:00 IST Report Abuse
Rpalnivelu கட்டு கம்பனி ஆட்சியில் பிரின்ஸ் என்றோரு மூன்றாம் தர ஆளை வைத்துக் கொண்டு சமதாழ்வு கல்வியை அறிமுகம் செய்த நாள்தான் த்ரவிஷர்களின் பொன்னாள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X