சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழருக்கு எதிரானவராக மோடியை காட்டப் பார்க்கிறீர்களா?

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழருக்கு எதிரானவராக மோடியை காட்டப் பார்க்கிறீர்களா?

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மண் சரிவு ஏற்பட்டு, தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த, 85 தமிழர்கள் புதைந்துள்ளனர். மண் சரிவில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவிக்கவில்லை.


'பிரதமர் கவனத்திற்கு அந்த தகவல் உடனே போயிருக்காது. அதற்குள், தமிழருக்கு எதிரானவர், பிரதமர் மோடி என, பட்டம் கட்டப் பார்க்கிறீர்களே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி அறிக்கை.



கொரோனாவால் உயிர் நீத்த அரசு ஊழியர்களுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படுவது போல, அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.


'நல்ல வேளை, கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும், 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, கேட்காமல் விட்டீர்கள்; அப்பாடா...' என, கூற வைக்கும் வகையில், தமிழ்நாடு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில பொது செயலர், தர்மராஜ் பேட்டி.



ஊரடங்கு விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்தியதுடன், மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல, 'இ - பாஸ்' தேவையில்லை என அறிவித்துள்ளது. அதை பின்பற்றி, பல மாநிலங்கள் ரத்து செய்துள்ளன. ஆனால், தமிழக அரசு ரத்து செய்ய மறுப்பது ஏன் என்பது, மர்மமாக உள்ளது.


latest tamil news





'மற்ற மாநிலங்களில், இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் வரவில்லையே; நம் மாநிலத்தில் அப்படியில்லையே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை.



கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு, இன்னுயிரை இழக்கும், முன்களப் பணியாளர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது, அந்த நிதி, 25 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே, சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாக, தமிழக அரசு செயல்படுகிறது.


'அரசு ஊழியர்கள் தரப்பிலேயே யாருமே, இதை கூறவில்லையே; 'பீலா' அறிக்கையோ என்ற சந்தேகம் வருகிறதே...' என, சொல்லத் துாண்டும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.



நாட்டின் அத்தியாவசிய தொடர்பு மொழியாக, ஹிந்தி இருக்கிறது. தனியார் பள்ளிகளில், வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஹிந்தி மொழி படிப்பு, தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.


'உ.பி., மாநில கட்சியை சேர்ந்தவர் என்பதால், உங்களுக்கு இந்த எண்ணம் வந்துள்ளதோ...' என, சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், சமாஜ்வாதி கட்சி தமிழக தலைமை செய்தி தொடர்பாளர், சுப.சிவபெருமாள் யாதவ் பேட்டி.



காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற, உலக நாடுகள் முன்வந்துள்ளன என, பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், காந்தியின், ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையை பின்பற்ற, மோடி இன்னும் முன்வரவில்லையே!


'ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு விரோதமாக, பிரதமர் மோடி என்ன செய்தார் என சொல்ல முடியுமா... என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., பேராசிரியர் அருணன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-202018:03:16 IST Report Abuse
J.V. Iyer பாஜகவையும், பிரதமரையும் தமிழ்நாடு ஒதுக்கினால், அதனால் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் பாஜகவும், பிரதமரும் தமிழ்நாட்டை ஒதுக்கினால், அது தமிழ் மக்களுக்கு சாபக்கேடு.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-ஆக-202014:54:22 IST Report Abuse
வெகுளி தன்னை தவிர பிறர் அனைவரையுமே தமிழர்களின் எதிரிகள் என்று சித்தரிப்பது திருட்டு திராவிடர்களின் தொழில் ரகசியங்களில் ஒன்று...
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
10-ஆக-202011:26:58 IST Report Abuse
Gopal இந்த கம்மிஸ்களுக்கு அறிவு குறைவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X