பொது செய்தி

இந்தியா

ரூ.15,000க்குள் மொபைல் போன்: ஆக., மாதம் என்ன வாங்கலாம்?

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று, அனைவரையும் வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் அவசியமாகியுள்ளது. அலுவலக வேலைக்கும், 'ஜூம், கூகுள் மீட், ஜியோமீட்' மற்றும் பிற வீடியோ-கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கும், மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசியம் ஆகிவிட்டன.ஆனால் ஸ்மார்ட்போன்களை வாங்க குறைந்தது ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவாகும் என்ற மனநிலையே மக்களிடம் உள்ளது. இதை மாற்றும் வகையில், இந்த மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலான பட்ஜெட் விலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளன.latest tamil newsகுறிப்பாக, போகோ எம்2 ப்ரோ (POCO M2 Pro) 4 ஜி.பி., ரேம் மற்றும் 64 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் - 13,999 ரூபாயாகவும், 64 ஜி.பி., ஸ்டோரேஜ், 6 ஜி.பி., ரேம் விலை 14,999 ரூபாயாகவும் உள்ளது. ரியல்மி 6ஐ, 4 ஜி.பி., ரேம் மாடலுக்கு 12,999 ரூபாயாகவும், மைக்ரோ எஸ்.டி., கார்டு வழியாக 256 ஜி.பி., வரை விரிவாக்கக்கூடிய டாப் எண்ட் 6 ஜி.பி., ரேம் மாடலுக்கு 14,999 ரூபாய்க்கு சந்தைக்கு வந்துள்ளது. இதேபோல், ரெட்மி நோட் 9 ப்ரோ 6 ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் 14,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.


latest tamil newsசாம்சங் எம்21, 4 ஜி.பி., ரேம் மற்றும் 64 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் (மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜி.பி., வரை விரிவாக்கக்கூடியது) கொண்டது 13,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதேபோல், விவோ ஒய் 30, 4 ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.14,999க்கு கிடைக்கிறது.
இப்படி, பட்ஜெட் விலையில் இந்த ஆக., மாதம் அறிமுகமாகியுள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை வாங்க பல்வேறு தரப்பினரும் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202017:35:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தற்போதுள்ள சூழ்நிலையில் சீன தயாரிப்பு போனை வாங்கினாலும் அதில் கூகுளை ஸ்டாக் ஆண்ட்ராய்டு உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். ரெட்மி போன்களில் உள்ள சீன மென்பொறி ஆபத்தானது
Rate this:
Cancel
Roy -  ( Posted via: Dinamalar Android App )
10-ஆக-202016:58:10 IST Report Abuse
Roy Please dont recommend Chinese phones
Rate this:
Cancel
sam - Bangalore,இந்தியா
10-ஆக-202015:45:50 IST Report Abuse
sam We are spending lakhs or lakhs of fees to schools and colleges (More number of engineering college in India), what kind of innovation they are teaching to our kids. India always depend on US, Euro, Chinese, Japanese products only. I am not sure, who has to change I mean parents mind set or education tem?
Rate this:
10-ஆக-202017:34:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்இரண்டுமே மாறவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X