கரூர்: கரூர் மாவட்டத்தில், 78 இடங்களில் நேற்று, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கந்தர் சஷ்டி கவசம் பாடப்பட்டு, வேல் பூஜை நடத்தப்பட்டது. கறுப்பர் கூட்டம் என்ற யு-டியூப் சேனலில், கந்தர் சஷ்டி கவசம் பாடல் குறித்து, அவதூறு பரப்பபட்டது. அதை, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதுதொடர்பாக, செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள், காவடிக்குழுக்கள், பழனி பாத யாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோள்படி, வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் பாடி, வேல் பூஜை நடத்த வேண்டும் என மாநில, பா.ஜ., தலைவர் முருகன் கேட்டுக் கொண்டார். அதன்படி, கரூர் மாவட்டத்தில், பா.ஜ., சார்பில், 56 இடங்களிலும், ஹிந்து முன்னணி சார்பில், 16 இடங்களிலும், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நான்கு இடங்களிலும், ஆர்.எஸ்.எஸ்., சார்பில், இரண்டு இடங்கள் என, 78 இடங்களில் நேற்று கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டு, வேல் பூஜை நடத்தப்பட்டது. கரூர் அருகே சின்ன கோதூரில் உள்ள, மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி தலைமையில் நடந்த, பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE