ராசிபுரம்: தமிழகத்தில், கந்தசஷ்டி கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவும் தமிழக பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் நேற்று மாலை, முருகன் வேலுக்கு பூஜை செய்வதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில், வெற்றிவேல், வீரவேல் என்ற ஸ்டிக்கரை வாகனங்கள், வீடுகளின் கதவுகளில் ஒட்டினர். அதேபோல், வீட்டு வாசலில் வேலுக்கு பூஜை செய்ததுடன், கந்தசஷ்டி பாராயணம் செய்தனர். மங்களபுரத்தில், பா.ஜ., தலைவர் பாஸ்கர் தலைமையிலும், நாமகிரிப்பேட்டையில் குமரவேல் தலைமையிலும், ராசிபுரத்தில், மணிகண்டன், சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் கந்த சஷ்டி பாராயணம் செய்தனர். பரவலாக நேற்று மாலை மழை பெய்தாலும், பா.ஜ.,வினர் இந்த நிகழ்ச்சியை தங்களது பகுதிகளில் செய்து முடித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE