இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு| Sensex surges over 300 points in early trade; Nifty tops 11,300 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (1)
Share
மும்பை : வர்த்தக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தன. இறுதியில் உயர்வுடன் நிறைவடைந்தன.கொரோனா பிரச்னையால் உலகளவில் பொருளாதாரம் மந்தகதியில் இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதால் பொருளாதாரமும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வர தொடங்கி உள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில்
stock market, BSE, NSE, sensex

மும்பை : வர்த்தக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தன. இறுதியில் உயர்வுடன் நிறைவடைந்தன.

கொரோனா பிரச்னையால் உலகளவில் பொருளாதாரம் மந்தகதியில் இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதால் பொருளாதாரமும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வர தொடங்கி உள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வெள்ளியன்று சிறு உயர்வுடன் முடிந்த நிலையில் இன்று(ஆக., 10) வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சென்செக்ஸ் 317 புள்ளிகள் உயர்ந்து 38,358ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து 11,306ஆகவும் வர்த்தகமாகின.

ஆசிய மற்றும் உலகளாவிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல் ஆட்டோமொபைல், வங்கி மற்றும் பார்மசி தொடர்பான நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டதன் எதிரொலியாக இன்றைய இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.


latest tamil news
தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருக்கும் பங்குச்சந்தைகள் மதியம் 2:00 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 75 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகின. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 141.50 புள்ளிகள் உயர்ந்து 38,182.08ஆகவும், நிப்டி 56.10 புள்ளிகள் உயர்ந்து 11,270.15ஆகவும் நிறைவடைந்தன.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறு உயர்வுடன் ரூ.74.89ஆக வர்த்தகமானது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X