பொது செய்தி

இந்தியா

பிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். 'பாரதி சேவா சங்கம்' என்பது பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ ஆர்.எஸ்.எஸ்., (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.latest tamil news'பாரதி சேவா சங்கம்' என்பது பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ ஆர்.எஸ்.எஸ்., (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்தவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் உதவவும் இந்த அமைப்பினர் தன்னார்வலர்களாக களமிறங்கியுள்ளனர்.


latest tamil newsமேற்கு வங்கம் முதல் கேரளா வரை கொரோனா நிவாரணப் பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா 26,000, கர்நாடகத்தில் 8,400 கேரளாவில் 42,000 தன்னார்வலர்கள் இணைந்து செய்த சேவையில், கேரளாவில் 42 லட்சம், கர்நாடகாவில் 3 லட்சம், சட்டீஷ்கரில் 2 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.மேலும், கொரோனா ஊடரங்கின் போது, 5.07 லட்சம் ஆர்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள், 4.66 கோடி உணவு பொட்டலங்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர். 44.86 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர் திரும்ப உதவியுள்ளனர்.


latest tamil newsமகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய 100 பேர் கொண்ட தன்னார்வலர்கள் இணைந்து செயலாற்றி வருகின்றனர். மேலும், மகாராஷ்ராவில் 24 ஆயிரம் பேர் பிளாஸ்மா ரத்த தானம் செய்துள்ளனர். சட்டீஷ்கரில் பிளாஸ்மா தானம் செய்ய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவி வரும் இந்த தன்னார்வலர்களை, பல்வேறு தரப்பபினரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் RSS எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கமானது தானாக முன்வந்து சேவை செய்வோருக்கான அமைப்பு. அதன் சேவைகள் அளப்பறியது. அதில் ஒரு சிறு துளியை அடையாளம் காட்டியுள்ளீர்கள்....நன்றி.. தமிழக மீடியாக்கள் சங்கத்தை தூஷிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.... அதுசரி....காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்தானே..
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
10-ஆக-202019:18:50 IST Report Abuse
Madhusoodhana Ramachandran RSS தன்னலமற்ற ஒரு தொண்டு நிறுவனம். இந்தியா முழுவதிலும் அவர்கள் ஜாதி மொழி பார்க்காமல் அரசியல் கலப்பில்லாமல் நன்றி எதிர் பாராமல் பதவி சுகத்திற்காக அலையாமல் சேவை செய்பவர்கள்.அவர்கள் தொண்டுள்ளம் உள்ளவர்கள். நம் தமிழ்நாட்டு அரசியலில் உள்ளவர்கள் அவர்களிடம் இருந்து கற்க மனம் வேண்டும். புறம் பேசாமலும் அவர்களை கொச்சை படுத்தாமல் இருந்தால் போதும்.
Rate this:
Cancel
Ganapathi Ramani - Chennai,இந்தியா
10-ஆக-202018:44:18 IST Report Abuse
Ganapathi Ramani கட்டுக்கோப்பான சேவை மனப்பாங்கு மற்றும் நாட்டுப்பற்று மிகுந்த இந்த அமைப்பு பல பேரிடற்காலங்களில் புரிந்த மக்கள் தொண்டு மகத்தானது . இவ்வமைப்பை ஒரு குறிப்ப்பிட்ட ஜாதியுடன் இணைத்து இழிவாக பேசும் தமிழ்நாட்டு கட்சிகள் இவர்களைப்போல் விளம்பரம் இல்லாமல் மக்கள் தொண்டு ஆற்றுவார்களா அல்லது முடியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X