சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை வனப்பகுதியில் உயிருக்கு போராடிய பெண் யானை இறப்பு

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பேரூர்: கோவை , ஜாகிர் போராத்தி வனத்தில், உயிருக்கு போராடி வந்த பெண் யானை, இன்று காலையில் இறந்தது.கோவை, போளுவாம்பட்டி வனச்சரகம் ஜாகிர் போராத்தி வனப்பகுதியில், 15 வயதுடைய பெண் யானை ஒன்று சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி வந்தது. பழங்குடியினரின் தகவல் பேரில் சென்ற வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதன் வயிற்றில் நோய் தொற்று இருந்ததால், நேற்று ரத்த பரிசோதனை
tamil nadu, elephant death, elephant, coimbatore news, கோவை, வனப்பகுதி, யானை, மரணம்,உயிரிழப்பு

பேரூர்: கோவை , ஜாகிர் போராத்தி வனத்தில், உயிருக்கு போராடி வந்த பெண் யானை, இன்று காலையில் இறந்தது.

கோவை, போளுவாம்பட்டி வனச்சரகம் ஜாகிர் போராத்தி வனப்பகுதியில், 15 வயதுடைய பெண் யானை ஒன்று சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி வந்தது. பழங்குடியினரின் தகவல் பேரில் சென்ற வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதன் வயிற்றில் நோய் தொற்று இருந்ததால், நேற்று ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தொடர் சிகிச்சையால் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலையில், அந்த யானை பரிதாபமாக இறந்தது. அதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.


latest tamil news




கோவை வனக்கோட்டத்தில் நடப்பாண்டு இதுவரை, 16 யானைகள் இறந்துவிட்டது. வனங்களின் 'வளம்' ஆக கருதப்படும் யானைகள், தொடர்ந்து இறப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202020:17:51 IST Report Abuse
ஆப்பு இப்படி ஒரு நோஞ்சலான யானையை பார்த்ததே இல்லை.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
10-ஆக-202017:48:48 IST Report Abuse
Girija பாவிகள் பொய் சொல்வதற்கும் ஓர் அளவில்லை? ''நேற்று இரவு முழுதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. அதிகாலையில் தான் திரும்பி வந்தோம்". முதலில் ஓர் இரவில் 20 பாட்டில் க்ளுகோஸ் ஏற்றமுடியுமா ? மருத்துவர் பதில் சொல்ல வேண்டும் . வயிற்றில் நோய் தொற்று இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார். ரத்த பரிசோதனை செய்யப்பட உள்ளது. பொய் சொல்வதற்கும் ஒரு அளவில்லை ? இனிமேல் தான் ரத்த பரிசோதனை செய்ய போகிறார்களாம். இதில் உண்மை என்னவென்றால் இவர்கள் யானைக்கு எந்த ஒரு மருத்துவ சிகைச்சையும் அளிக்கவில்லை என்று நேற்று காலை அங்கு சென்ற மக்கள் தெரிவித்தனர். மருத்துவ குழு இரவு முழுவதும் தங்கி 20 பாட்டில்? குளுகோஸ் ஏற்றியதற்கான ஒரு தடயம் கூட இருக்காது ? இந்த மருத்துவர் குழு இதுவரை இந்த ஒரு வருடத்தில் இவளவு யானைகளை கொன்றுள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X